நடிகர் விக்ரமை பார்க்க முதல் மாடியில் கண்ணாடிகளை உடைத்து ஆபத்தான முறையில் திரையரங்கிற்குள் சென்ற ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் முக்கிய சாலையில் விக்ரம் வருவதால் அதிக ஒலி மாசு, காற்று மாசு மற்றும் குப்பைகளை ஏற்படுத்தும் வெடிகள் வைத்ததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் குப்பைகளாக நிரம்பிய சாலையாக மாறியுள்ளது. இந்த வாரம் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்கில் வீர தீர சூரன் படத்தை பார்ப்பதற்காக விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் வருகை தந்தனர்.
#VeeraDheeraSooran going strong at USA box office.
$100k and counting. pic.twitter.com/g996Q3mzZT
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 29, 2025
மேலும் படிங்க: 40-ஐ கடந்தும் சிங்கிளாக சுற்றும் நடிகர்கள்!! லிஸ்டு ரொம்ப பெருசு..
திரையரங்கம் இருக்கும் சாலை மாநகராட்சியின் முக்கிய சாலைகளாக உள்ளது. குறிப்பாக இந்த சாலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வரவேற்கும் விதமாக பொதுமக்களுக்கு இடையூறாக தடை செய்யப்பட்ட அதிக சத்தம் ஏற்படுத்தும் வெடிகளை பயன்படுத்தினர். அதிக சத்தம் கொண்ட வெடிகள் பயன்படுத்தியதை காவல்துறையினர் இருந்தும் கண்டு கொள்ளவில்லை. மேலும், விக்ரமை பார்க்க வந்த ரசிகர்களால் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் அதிக சத்தம் கொண்ட பேப்பர் வெடிகள் வெடித்ததால் ஒலி மாசு, காற்று மாசு மற்றும் சாலையில் அதிகமான குப்பைகள் ஆகியவை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இது போன்ற அதிகம் சத்தம் மற்றும் குப்பைகளை ஏற்படுத்தும் பேப்பர் வெடிகள் பயன்படுத்துவதை காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியபடி சென்றனர். மேலும், நடிகர் விக்ரமை பார்க்க முதல் மாடியில் கண்ணாடிகளை உடைத்து ஆபத்தான முறையில் திரையரங்குகள் சென்ற ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திரையரங்குக்குள் வந்த விக்ரம் காரை விட்டு இறங்க விடாமல் ரசிகர்கள் கார்களுக்கு மேல் ஏறினர். இதனால் காரின் உள்ளே இருந்து விக்ரம் திரையரங்குக்குள் எவ்வாறு வர முடியும் என ரசிகர்களிடம் கோபத்துடன் பேசினார். அதன் பின்பு திரையரங்குளிருந்து வந்த பவுன்சர்கள் மிகவும் கஷ்டப்பட்டு விக்ரமை உள்ளே அழைத்து சென்றனர். திரையரங்கம் உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் திரையரங்குக்குள் சென்று ரசிகர்களை பார்க்காமல் மீண்டும் வெளியேறினார்.
மேலும் படிங்க: ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் பிரபல யூடியூபர் வி.ஜே. சித்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









