Fathers Day 2025 Special Tamil Songs: உலகம் முழுவதும் இன்றைய தினத்தை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் அப்பாவுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழுங்கள். இதனிடையே தமிழ் சினிமாவில் என்றென்றும் கொண்டப்படும் அப்பா பிள்ளைகளின் பல சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள் உள்ளன. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
அபியும் நானும்: அபியும் நானும் படத்தில் வா வா என் தேவதை பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. இப்பாடலுக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
தங்க மீன்கள்: தந்தைக்கு ஒரு மகளின் சிறப்பு என்ன என்பதை தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை பாடல் சிறப்பாக சித்தரிக்கிறது.
டிக் டிக் டிக்: டிக் டிக் டிக் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இப்படத்தில் குறும்பா பாடல் தந்தை மகனுக்காக பாடும் பாடலாகும்.
கேடி பில்லா கில்லாடி ரங்கா: கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். இதில் விமல், சிவகார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, டெல்லி கணேசன் பலர் நடித்துள்ளனர். இதில் இடம்பெற்றிருந்த தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் பாடல் தந்தை மகன் இடையே இருக்கும் பாசத்தை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
போடா போடி: இயக்குனர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் இதில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் அப்பன் மவனே வாடா பாடல் ஹிட் பாடலாகும்.
தெய்வத்திருமகள்: 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தெய்வத்திருமகள். ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் பலர் நடித்திருந்த இந்த படத்தில் இருந்து ஆரீரோ ஆராரீரோ பாடல் சூப்பர் ஹிட் பாடலாகும்.
என்னை அறிந்தால்: நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் என்னை அறிந்தால். ஹாரிஸ் ஜயராஜ் இசையமைக்க, டான் மெக்கார்த்தர் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இத்திரைப்படத்திற்கு தாமரை பாடல்வரிகள் அமைத்துள்ளார்.
விஸ்வாசம்: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தில் அஜித் குமாருடன் நயன்தாரா, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் கண்ணான கண்ணே பாடல் ஹிட் பாடலாகும்.
டாடா: இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்கியராஜ் என பலர் நடித்திருந்த திரைப்படம் டாடா. இதில் இடம்பெற்றிருந்த தாயாக நான் எனும் பாடல் தந்தை மகள் அன்பை வெளிப்படுத்துகிறது.
ஜெயிலர்: ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ரத்தமாரே. தந்தை மகன் உறவு குறித்து பேசும் இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டான்: டான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை - திரில்லர் திரைப்படம். இதில் இடம்பெற்றிருந்த முதல் நாயகன் பாடல் தந்தை மகன் அன்பை வெளிப்படுத்துகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ