Fathers Day Tamil Movies 2025: உலகம் முழுவதும் இன்றைய தினத்தை தந்தையர் தினமாக (Fathers Day 2025) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்கள் அப்பாவுக்கு வாழ்த்துகளை பகிர்ந்து மகிழுங்கள். தனது வம்சத்தை நீடிக்கச் செய்யும் தனது வாரிசை அள்ளி அரவணைத்து, சீராட்டி பாராட்டி வளர்க்கும் ஒவ்வொரு தந்தையும் பிள்ளைகளின் முதல் நண்பனாக திகழ்கிறார்.
இந்த பூ உலகில் ஒவ்வொரு பிள்ளையின் மிகச்சிறந்த முதல் நண்பன் யாரென்றால் அது அவரது தந்தை தான் என கூறுவதில் ஆச்சர்யம் இல்லை… இவ்வளவு ஏன்! குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் முதல் கதாநாயகனே அவரது தந்தை தான் என்று கூறினால் அது மிகையாகாது.... ஏனென்றால் அப்பா …..என்ற சொல்லில் கோடிக்கணக்கான அர்த்தங்கள் ஒளிந்திருக்கின்றது!.
அப்பாவுடனான உறவு ஒவ்வொரு குடும்பத்திலும் வித்தியாசமாக இருக்கும். சிலருக்கு தோழனாக, ஆசிரியராக, அதட்டலான அப்பாவாக இருப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நாம் பார்த்து ரசித்த அப்பாக்கள் பற்றி காணலாம்.
கன்னத்தில் முத்தமிட்டால்: மணிரத்னம் இயக்கத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் குழந்தை நட்சத்திரமாக பார்த்திபன் மகள் கீர்த்தனா நடித்த படம் மாஸ்டர் பீஸ் படமாகும். இலங்கை அகதியின் மகளை தத்தெடுத்து தனது மகளை போல பாசத்தை கொட்டி வளர்க்கும் ஒரு பெற்றோரின் கதை. எழுத்தாளர் சுஜாதாவின் 'அவளும் நானும்' சிறுகதையை மையமாக கொண்டது இந்த படம்.
அபியும் நானும்: ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, திரிஷா நடித்த படம் அபியும் நானும். தந்தைக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பாசத்தை அழகாக இந்த வடம் காட்டியுள்ளது.
தெய்வ திருமகள்: ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம், அமலா பால், அனுஷ்கா, பேபி சாரா நடிப்பில் வெளியான படம் 'தெய்வ திருமகள்'. மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும் 7 வயது மகளுக்கும் இடையில் நடக்கும் பாசப்போராட்டம் தான் இந்த படத்தின் கதையாகும்.
தங்க மீன்கள்: ராம் இயக்கி நடித்த தங்க மீன்கள் கதை தங்க மீனாக தனது மகளை வளர்க்க வேண்டும் என ஆசைப்படும் நிலையான வருமானம் இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தையின் கதையாகும்.
தவமாய் தவமிருந்து: சேரன் இயக்கி நடித்த “தவமாய் தவமிருந்து” படத்தில் பத்மபிரியா, மிர்ச்சி செந்தில், சரண்யா, ராஜ்கிரண் பலரும் நடித்தனர். தந்தை வேடத்தில் ராஜ்கிரண் அனைவரையும் கண்கலங்க வைத்திருப்பார்.
வாரணம் ஆயிரம்: கௌதம் மேனன் இயக்கிய தமிழ் சினிமாவின் வித்தியாசமான அப்பாக்களில் கதையாக “வாரணம் ஆயிரம்” அமைந்திருந்தது. இப்படத்தில் அப்பா - மகனாக சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தில் அப்பா கேரக்டர் ட்ரேட் மார்க் அமைந்திருக்கும்.
எம் மகன்: பல பேர் வீடுகளில் அப்பாவை எம்டன் என அழைப்பார்கள். ஏனெனில் சிலர் வீடுகளில் அப்பாக்கள் முறைப்பு, அதட்டல், கண்டிப்பாக இருப்பார்கள். அதன்படி அப்பாக்களை எம்டன் மகன் படம் மூலம் கண் முன் நிறுத்தினார் நாசர். மகனாக பரத், நடித்திருப்பார். அம்மாவாக சரண்யாவும், மாமாவாக வடிவேலுவும் இதில் நடித்திருப்பார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ