‘முத்து’ படத்தில் மீனாவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்! ரஜினி அழைத்தும் ‘நோ’ சொன்னாராம்-யார் தெரியுமா?

First Choice For Heroine In Muthu Movie : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் மீனாவின் கதாப்பாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Mar 18, 2025, 01:14 PM IST
  • முத்து படத்தில் நடிக்க இருந்தவர்..
  • ரஜினிகாந்த் கேட்டும் மறுத்துவிட்டார்...
  • யார் தெரியுமா?
‘முத்து’ படத்தில் மீனாவுக்கு பதில் நடிக்க வேண்டியவர்! ரஜினி அழைத்தும் ‘நோ’ சொன்னாராம்-யார் தெரியுமா?

First Choice For Heroine In Muthu Movie : தமிழ் நாட்டின் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாராக விளங்குபவர், ரஜினிகாந்த். இவருக்கு இந்த பட்டத்தை கொடுக்க பெரிய காரணம் இவரது நடிப்பு என்பதை தாண்டி, இவர் செலக்ட் செய்து நடித்த படங்களும், அவை வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ஹிட் ஆனதும்தான். அப்படி, மக்கள் மத்தியில் பெரிதாக ஹிட் ஆன படங்களுள் ஒன்று முத்து. இந்த படத்தில், மீனா ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு முன்னர் இந்த வாய்ப்பு வேறு ஒரு நடிகைக்கு சென்றதாம். அந்த நடிகை யார் தெரியுமா?

Add Zee News as a Preferred Source

முத்து படத்தில் மீனா..

கோலிவுட்டின் ரானியாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர், மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மையாளம், தமிழ் உள்ளிட்ட பன்மொழி படங்களில் நடித்து வந்த இவர், வயது வந்த பின்பு ஹீரோயினாக அறிமுகமானார். இதில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய ஒரு  விஷயம் என்னவென்றால், நடிகை மீனா குழந்தையாக இருந்த போது ரஜினிகாந்த் அவருக்கு கிட்டத்தட்ட தந்தைக்கு இணையான பாத்திரத்தில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ திரைப்படத்தில் நடித்திருப்பார். 

அப்படத்தில் மீனா அவரை அன்புடன்  ‘ரஜினி அங்கிள்’ என்று அழைப்பார். ஆனால், அதற்கு சில வருடங்களிலேயே, அவர் ரஜினிக்கு ஜோடியாக வீரா, எஜமான், முத்து உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்தார். அதுவும், இந்த படத்தில் இருவரும் நெருக்கமாக வேறு நடித்திருந்தனர். ஆனால், முத்து படத்தில் மீனாவிற்கு பதில் வேறு ஒரு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருக்குதான் இந்த வாய்ப்பு சென்றதாக கூறப்படுகிறது. அவர் யார் தெரியுமா?

மீனாவிற்கு பதில் நடிக்க இருந்தவர்..

90s குழந்தைகள் மறக்க முடியாத நபர்களுள் ஒருவர், பெப்சி உமா. பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இவர், இப்போது எதிலும் ஆக்டிவாக இல்லை. இவர், நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த போது, இவரைத்தேடி பல சினிமா வாய்ப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. இதை அவரும் சில நேர்காணல்களில் தெரிவித்து இருக்கிறார். 

முத்து படத்தில் நடிக்க, மீனாவுக்கு முன்னர், இவருக்குதான் அழைப்பு விடுக்கப்பட்டதாம். ஆனால், அவர் அதை மறுத்துவிடவே மீனா ஹீரோயின் ஆனார். இன்னொரு முறையும் ரஜினி தன்னுடன் நடிக்குமாறு, பெப்சி உமாவை அழைத்தாராம். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஷாருக்கானின் படத்திற்கும் ரிஜெக்‌ஷனா!!

பெப்சி உமாவை தேடி தமிழில் இருந்து மட்டுமல்ல, இந்தியில் இருந்தும் பட வாய்ப்புகள் வந்துள்ளது. அதில், அவரை ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தார்களாம். அதற்கும் அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் சமீபத்தில் மனம் திறந்துள்ளார். இந்த விஷயத்தை கேள்வி பட்டவர்கள், அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Pepsi Uma

காரணம் என்ன?

டிவி-க்குள் நுழைபவர்களில் பெரும்பாலானோர் சினிமாவில் எப்படியாவது பெரிதாக சாதித்து விட வேண்டும் என்ற ஆசையுடன்தான் கேமராவிற்கு முன்பு நிற்கின்றனர். ஆனால் பெப்சி உமாவிற்கு அந்த ஆசை எதுவும் இல்லையாம். தனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லாததால், அவர் தன்னை தேடி வந்த அனைத்து சினிமா வாய்ப்புகளுக்கும் நோ சொல்லியிருக்கிறார்.

இப்போது எங்கு இருக்கிறார்?

பெப்சி உமா, சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் தாெகுப்பாளினியாக ரீ-எண்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு மேற்பட்டு வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. 

மேலும் படிக்க | புஷ்பா 2: ராஷ்மிகாவுக்கு பதில் நடிக்க இருந்த 37 வயது நடிகை! யார் தெரியுமா?

மேலும் படிக்க | கூலி: ரஜினிக்கு மகளாக நடிக்க இருந்த 31 வயது நடிகை! ஸ்ருதிஹாசன் இல்லை-வேறு யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News