First Flop Movie Of Tamil Cinema In 2025 : திரையரங்குகளில் படங்கள் வெளியாவதும், அது பின்னர் தோல்வியடைவதும்-வெற்றி பெறுவதும் வழக்கமான ஒன்று. தமிழ் திரையுலகை பொறுத்தவரை, கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்கள் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஜூலை மாதத்திற்கு பிறகுதான் கமல், ரஜினி, விஜய் என டாப் ஸ்டார்கள் நடித்த படங்கள் வெளியானது. ஆனால், அந்த கதை இந்த ஆண்டில் கிடையாது. ஜனவரி மாதம் முதலேயே ரசிகர்களுக்கு திரை விருந்து ஆரம்பித்து விட்டது. கடந்த மாதம் வெளியான டிராகன் படமும், அதற்கு முன்னர் வெளியான குடும்பஸ்தன் படமும்தான், ஓரளவிற்கு ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிப்பவையாக இருந்தன. அதே போல, 12 வருடங்களுக்கு முன்பு உருவாகி, போன பொங்கலுக்கு வெளியான மத கஜ ராஜா திரைப்படமும் நல்ல வசூலை பெற்றது.
2 மாதத்தில் இத்தனை தோல்விகளா?
2025ஆம் ஆண்டு ஆரம்பித்து, இப்போதுதான் மார்ச் மாதம்தான் வந்துள்ளது. அதற்குள், தமிழ் சினிமாவில் தற்போது 45 படங்கள் ரிலீஸாகி விட்டதாக கூறப்படுகிறது. இதில், மொத்தம் 4 படங்கள் மட்டுமே பெரிய ஹிட் அடித்துள்ளதாம். அதில் ஒரு படம், ரசிகர்களை அதிகமாக எதிர்பார்க்க வைத்து தோல்வியை தழுவியது. அது எந்த படம் தெரியுமா?
எதிர்பாராத தோல்வியை தழுவிய படம்..
இந்த படத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக அத்தனை எதிர்பார்ப்புகள் உருவானது. காரணம், இந்த படத்தில் ஹீரோவாக நடித்தவரின் படம் எதுவுமே 2 வருடமாக வெளியாகவே இல்லை. அது மட்டுமன்றி, இப்படத்தின் ஷூட்டிங் மட்டும் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நடைப்பெற்றது. அதுவும் சென்னையில் இல்லை, ஒரு வெளிநாட்டில். அந்த படம் எது என்பதை கண்டு பிடித்து விட்டீர்களா? ஆம், அது விடாமுயற்சி படம்தான்.

தோல்விக்கான காரணம்..
அஜித்குமார் நடிப்பில் உருவான விடாமுயற்சி படத்தை, மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம், சுமார் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்பட்டது. கதை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், திரையில் பார்க்கையில் பல விஷயங்கள் ரசிகர்களின் மனங்களில் ஒட்டாதது போல இருந்ததாக கூறப்பட்டது.
அதே போல, பெரிய ஸ்டார்கள் நடிக்கும் படங்களில் சில மாஸான காட்சிகள் இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அது, விடாமுயற்சி படத்தில் இல்லாததால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். முதல் காட்சி முதலாகவே, இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால், கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
100 கோடி வசூலித்தும் தோல்வி..
விடாமுயற்சி திரைப்படம்தான் இதுவரை அஜித்தின் கெரியரில் குறைந்த வசூல் பெற்ற படம் என கூறப்படுகிறது. மொத்தம் 20 நாட்கள் இந்த படம் தியேட்டர்களில் ஓடியதாகவும் அதில் உலகளவில் மொத்தம் ரூ.138 கோடி வசூலை இப்படம் பெற்றதாகவும் சில தரவுகள் கூறுகின்றன. அஜித்திற்கு கம்-பேக் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், கடைசியில் அவரது திரை வாழ்க்கையிலேயே மோசமான படமாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த படம் 100 கோடி வசூலை தாண்டி இருந்தாலும், பட்ஜெட்டை விட மிக குறைவான வசூலை பெற்றதால், தோல்வி படமாகவே கருதப்படுகிறது.
மேலும் படிக்க | 2025-ல் இதுவரை ஹிட் ஆன 3 படங்கள்! என்னென்ன தெரியுமா? முழு லிஸ்ட் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









