சமீப காலமாக தமிழ் சினிமாவில் அதிகளவில் ஹாரர் படங்களின் வரவுகள் அதிகரிக்க தொடங்கிவிட்டது. அதில் பலரும் அதிகம் ரசித்து பார்த்த படங்கள் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் ஒவ்வொரு பாகங்களும் தான். கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் முதல் பாகத்தில் ஹன்சிகா மோத்வானி, வினய், ஆண்ட்ரியா, சுந்தர்.சி, கோவை சரளா, மனோபாலா, ராய் லட்சுமி, சந்தானம் ஆகியோர் நடித்திருந்தனர். அதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு வெளியா அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தில் சுந்தர்.சி, சித்தார்த், ஹன்சிகா மோத்வானி, திரிஷா, பூனம் பஜ்வா, கோவை சரளா, மனோபாலா, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2021ம் ஆண்டில் வெளியான அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தில் ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, ஆர்யா, சுந்தர்.சி, விவேக் ஆகியோர் நடித்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு பாகத்திலும் திகிலூட்டும் வகையில் பிரம்மாண்டமான அரண்மனைகள் இடம்பெற்று இருக்கும். கடந்த 2005ம் ஆண்டில் பிரபு, ரஜினி, ஜோதிகா, நயன்தாரா ஆகியோரது நடிப்பில் திகில் நிறைந்த கதையம்சத்துடன் வெளியான 'சந்திரமுகி' படத்தை தொடர்ந்து பல பேய் படங்கள் தமிழில் வர தொடங்கியது. இதுபோன்ற கதையம்சம் கொண்ட படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. இதுபோன்ற படங்களும் பாக்ஸ் ஆபிசில் சிறந்த அளவில் வசூலை வாரி குவித்தது. அரண்மனை படத்தின் ஒவ்வொரு பாகங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினை தொடர்ந்து அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி வருகிறார். 


மேலும் படிக்க | “அந்த மாதிரி படமா எடுக்குறேன்” விஷால் புகாரல் ஆடிப்போன இந்திய சினிமா! என்ன நடந்தது?


இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.


முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் சுந்தர் சி. மேலும் ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் இந்த படத்தை Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாக்கி வருகின்றது.


இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியானது. மேலும் வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த வடம் திரையரங்கில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.



 



 மேலும் படிக்க | மகளுடன் பட ப்ரமோஷனில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ