வித்தியாசமான லூக்கில் துருவ் விக்ரம்.. பட்டையை கிளப்பும் பைசன்!

Bison First Look: துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Mar 7, 2025, 09:30 PM IST
  • பைசன் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
  • வித்தியாசமான லுக்கில் துருவ் விகரம்
வித்தியாசமான லூக்கில் துருவ் விக்ரம்.. பட்டையை கிளப்பும் பைசன்!

Bison First Look: இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பைசன். கபடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்து வருக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (மார்ச் 07) மாலை வெளியாகி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

அதில், இரண்டு துருவ் விகரம் உள்ளனர். குறிப்பாக நின்றுக்கொண்டிருக்கும் துருவ் விக்ரமின் பின்னால் கொம்புடன் கூடிய எருமையின் தலையும் போஸ்டரில் இடம் பிடித்துள்ளது. பொதுவாக மாரிசெல்வராஜின் படம் என்றாலே மிருகங்கள் இடம் பிடிப்பது வழக்கம். பரியேறும் பெருமாள் படத்தில் கருப்பி என்ற நாய், கர்ணன் படத்தில் கழுதை, மாமன்னன் படத்தில் பன்றி, வாழை திரைப்படத்தில் மாடு என மிருகங்களை ஓர் கதாப்பாத்திரமாக உருவாக்கி வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். 

மேலும் படிங்க: கூலி படத்தில் அமீர்கான் போல-ஜெயிலர் 2 படத்திலும் பாலிவுட் நடிகர்! யார் தெரியுமா?

அந்த வகையில் தற்போது உருவாக்கி வரும் பைசன் திரைப்படத்தில் எருமை இடம் பிடித்துள்ளது. அதன் குறியிடாக போஸ்டரில் கொம்புடன் கூடிய எருமை துருவ் விக்ரமிற்கு பின்னால் இடம் பிடித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

துருவ் விக்ரம் 

வர்மா படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் கிராமத்து கதையில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் அவரது தந்தை விக்ரமுடன் மகான் திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்போது இப்படம் அவருக்கு திருப்புமுறையாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் கலையரசன், பசுபதி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மூர்க்கமாய்  உடைக்கிறேன்

நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்.. ஏன் வருகிறேன் என்றும் உனக்கு தெரியும்.. வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்கு தெரியும்.. ஆதலால்.. நீ கதவுகளை அடைக்கிறாய்.. நான் முட்டிமோதி மூர்க்கமாய்  உடைக்கிறேன். பைசன் (காளமாடன்) என பைசன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட பதிவில் மாரி செல்வராஜ் இவ்வாறு பதிவிட்டுள்ளார். பொதுவாக தான் அனுபவித்த வலிகளை படமாக்கும் மாரி செல்வராஜ் இப்படத்தில் எந்த மாதிரியாக எடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இடையே அதிகரித்துள்ளது. 

மேலும் படிங்க: சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வெளியான முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News