சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ - முதல் தோற்றம் வெளியீடு

நடிகர் சாந்தனு பாக்யராஜின் ’மெஜந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 15, 2025, 04:07 PM IST
  • மெஜந்தா திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்
  • ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ - முதல் தோற்றம் வெளியீடு

பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஜெ பி லீலாராம், ராஜு க, சரவணன் பா, மற்றும் ரேகா லீலாராம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளமெஜந்தாதிரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது!

Add Zee News as a Preferred Source

'இக்லூ' புகழ் இயக்குநர் பரத் மோகனின் இயக்கத்தில், நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், ‘மனதின் வண்ணங்களில் இருந்து பிறந்த காதல்என்ற மையக்கருவை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரிதான, ஆழ்ந்த காதல் கதையாக உருவாகியுள்ளது. போஸ்டரில் தென்படும் அடர்த்தியான மெஜந்தா வண்ணம், படத்தின் மைய உணர்வையும், கதைக்களத்தின் தீவிரத்தையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

நுணுக்கமான கதைசொல்லலுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பரத் மோகன், இரண்டு மனங்களின் வெவ்வேறு பக்கங்களை உளவியல் ரீதியாக ஆய்வு செய்யும் கதையாகமெஜந்தா’-வை உருவாக்கியுள்ளார். நடிகர்கள் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர், கதையின் உணர்வுப்பூர்வமான மற்றும் தீவிரமான தருணங்களை உணர்ந்து, உயரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் முக்கிய காட்சிகள் கோத்தகிரியின் ரம்மியமான சூழலிலும், அடுத்த ஷெட்யூல் சென்னையிலுமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

கண்ணைக் கவரும் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் ஆழமான உணர்வுகளுடன், 2026ஆம் ஆண்டின் மிக முக்கியமான காதல் படமாகமெஜந்தா’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

இந்த உளவியல் காதல் கதையில், ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஷரத் ரவி, சௌந்தர்யா சரவணன், படவா கோபி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

இசை: தரண் குமார்,

ஒளிப்பதிவு: பல்லு,

படத்தொகுப்பு: பவித்ரன்,

கலை இயக்குநர்: பிரேம்,

ஆடை வடிவமைப்பாளர்: குவோச்சாய்,

ஆக்‌ஷன் வடிவமைப்பு: சக்தி சரவணன்.

 

மேலும் படிக்க | செல்வராகவன்-கீதாஞ்சலி பிரிவு? இன்ஸ்டாவில் ஒன்றாக இருந்த பதிவுகள் டெலிட்!

மேலும் படிக்க | AK 64 படத்தில் இணையும் நாயகி! யார் தெரியுமா? ஏற்கனவே அஜித்துடன் நடித்தவர்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News