மேலிடத்தில் இருந்து உத்தரவு? இட்லி கடை படம் வெளியாகுமா? மீண்டும் சிக்கலில் தனுஷ்!

நடிகர் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நிலவி வரும் நிலையில், தற்போது Five Star Creations சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Mar 31, 2025, 01:58 PM IST
  • தனுஷ்க்கு ரெட் கார்டு போடப்படுமா?
  • அறிக்கை வெளியாகி பரபரப்பு.
  • Five Star Creations சார்பில் அறிக்கை.
மேலிடத்தில் இருந்து உத்தரவு? இட்லி கடை படம் வெளியாகுமா? மீண்டும் சிக்கலில் தனுஷ்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். நடிகரை தாண்டி இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டுள்ளார். தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக தனுஷ் இயக்கி, நடித்து இருக்கும் இட்லி கடை படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தனுஷ் மற்றும் 5 ஸ்டார் நிறுவனம் இடையே சில காரசார விவாதம் நடைபெற்று  வருகிறது. தனுஷ் முன்பணம் பெற்றுக்கொண்டு இன்னும் கால்ஷீட் தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நிலவி வருகிறது. ரெட் கார்டு போடப்பட்டதாகவும் இடையில் தகவல்கள் வந்தது. இந்நிலையில், தனுஷுக்கு எதிராக Five Star Creations பங்குதாரர் கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | தாயாக நடித்தவரை காதலித்த நடிகர்..2 முறை திருமணம்..இப்போ சிங்கிளா இருக்காரு-யார் அவர்?

Five Star Creations பங்குதாரர் கலைச்செல்வி அறிக்கை

"திரு.R.K.செல்வமணி அவர்களுக்கு, 06.09.2024அன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் Five star creations பங்குதாரர் என்ற முறையில் நான் கலந்து கொண்டு திரு. தனுஷ் அவர்கள் எங்களிடம் ஆறு வருடங்களுக்கு முன், முன்பணம் பெற்றுக் கொண்டு இன்று வரை கால்ஷீட் தரவில்லை  
என்றும் அதனால் நாங்கள் அனுபவிக்கும் மனவேதனைகளையும் பதிவு செய்தேன். அதனை புரிந்துகொண்ட எங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் திரு. தனுஷ் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்கு படம் நடித்து தரவேண்டும் (முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, DAWN pictures திரு. ஆகாஷ் அவர்களின் "இட்லிகடை" படப்பிடிப்பு நடக்கவேண்டும், "மேலிடத்து உத்தரவு" என்று கூறியதை மறந்தீரோ?

மேலும் October 30ம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள். நாங்கள் புதிதாக படம் தயாரிக்கவில்லை, ஏற்கனவே திரு. தனுஷ் அவர்கள் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தயாரித்த நிறுவனம் என்று தங்களுக்கு நினைவு கூறுகிறேன். நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன? தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தொழிலாளர் வலியை உணர்ந்த தாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள். தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில், அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எடுத்தோம் என்று வெளியே நின்றிருக்கும் பத்திரிகையாளர்களிடம் கூற வேண்டாம், October 30ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று திரு. கதிரேசன் பிரச்சினை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது?

மதிப்பிற்குரிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கவனத்திற்கு, அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே.... நடிகர்களிடம் வட்டி பெறும் நோக்கத்தில் எந்த தயாரிப்பாளரும் முன்பணம் தருவதில்லை... தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே.... எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்" என்று Five Star Creations பங்குதாரர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் 35 ரொமாண்டிக் ஹீரோ! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News