இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக கொண்டாடிவருகின்றனர். கலை மக்களுக்கானது, கவனிக்கப்படாத கலைஞர்கள் கலைகளை கவனப்படுத்துவதும், அங்கீகாரம் கொடுப்பதும் நம் கடமை என்கிற முனைப்போடு கலை மற்றும் இலக்கிய விழாவாக முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்திவருகின்றனர் பா.இரஞ்சித் மற்றும் நீலம் குழுவினர்.
இந்த வருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி அதாவது நாளை துவக்குவிறது. இந்த விழா சென்னை எழும்பூர் நீலம் புத்தக அரங்கில் துவங்குகிறது. ஏப்ரல் 2 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை பி கே ரோசி திரைப்படவிழா நடைபெறுகிறது, இந்த விழாவில் உலகத்திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
திரையிடல் நடைபெறும் இடம் -
பிரசாத் லேப் தியேட்டர் சாலிகிராமம்.
சென்னை.
ஏப்ரல் 3 முதல் 6 வரை பி கே ரோசி ஆவணப்படம் மற்றும் குறும்படங்கள் திரையிடலும் நடைபெறவிருக்கின்றன.
நடைபெறும் இடம்- மேக்ஸ் முல்லர் பவன், நுங்கம்பாக்கம். சென்னை.
ஏப்ரல் 12 , 13 வேர்ச்சொல் தலித் இலக்கியக்கூடுகை, நடைபெறும் இடம் முத்தமிழ் பேரவை. சென்னை,
ஏப்ரல் 18 தம்மா நாடகத்திருவிழா
இடம்- எழும்பூர் அருங்காட்சியகம். சென்னை,
ஏப்ரல் - 23 முதல் 29 வரை புகைப்படக்கண்காட்சியும், ஓவியக்கண்காட்சியும் நடைபெறுகிறது.
இடம் - லலித் கலா அகாடமி இரண்டாம் தளம் ,சென்னை.
மேலும் படிக்க | மேலிடத்தில் இருந்து உத்தரவு? இட்லி கடை படம் வெளியாகுமா? மீண்டும் சிக்கலில் தனுஷ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









