காந்தி கண்ணாடி படம் பல ஊர்ல ரிலீஸ் ஆகல! பாலா பேச்சு..

Gandhi Kannadi KPY Bala : பிரபல நடிகர் பாலா, சமீபத்தில் காந்தி கண்ணாடி எனும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சில ஊர்களில் ரிலீஸாகவில்லை என்று மக்கள் கூறியதாக பாலா ஒரு வீடியோவை வெளியிட்டார்.

Written by - Yuvashree | Last Updated : Sep 10, 2025, 06:24 PM IST
  • காந்தி கண்ணாடி திரைப்படம்
  • ஹீரோவாக நடித்த பாலா
  • பல ஊர்களில் வெளியாகவில்லை..
காந்தி கண்ணாடி படம் பல ஊர்ல ரிலீஸ் ஆகல! பாலா பேச்சு..

Gandhi Kannadi KPY Bala : நடிகர் பாலா நடித்து வெளியாகிய காந்தி கண்ணாடி திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

Add Zee News as a Preferred Source

பல ஊர்களில் வெளியாகவில்லை..

காந்தி கண்ணாடி திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பிற்கு பாலா நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும், பலர் தன்னிடம் வந்து படம் சில ஊர்களில் வெளியாகவில்லை என்று சொன்னதாகவும், எந்த ஊர் என்று கூறினால் அங்கு ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்வேன் என்றும் கூறினார். 

மக்களுடன் படம் பார்த்த பாலா!

திரையிட்ட திரையரங்குகளை நேரில் சென்று காந்தி கண்ணாடி திரைப்படத்திற்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்பு எப்படி உள்ளது  என்பதைக் குறித்து படத்தின் குழுவினர் நேரில் சென்று கேட்டறிந்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் காந்தி கண்ணாடி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது 

நேற்று நடிகர் பாலா மற்றும் படத்தின் குழுவினர் நேரில் சென்று படத்தை மக்களுடன் மக்களாக கண்டுகளித்து படம் குறித்து கேட்டறிந்து பொதுமக்களுடன் தங்களுடைய இந்த படத்திற்கான அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டனர். 

அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய பாலா கூறியதாவது - கோவை மக்கள் தனக்கு நல்ல ஆதரவை கொடுத்துள்ளனர் என்பதை இந்த படம் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.எனவும் நான் வளர்ந்த பாதையில் இருந்து தற்போது வரை மக்கள் இல்லை என்றால் நான் தற்போது இந்த இடத்தில் இல்லை. நீங்கள் கொடுத்த வரவேற்பு உற்சாகம் தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது. தொடர்ந்து தங்களை உற்சாகப்படுத்துவதற்கான அனைத்து பாதைகளிலும் நான் தேர்ந்தெடுப்பேன் என தெரிவித்ததுடன் கடைசி வரை நன்றி மறவாமல் பயணிப்பேன் என தெரிவித்தார். 

நடிகர் பாலாவிற்கும் படக்குழுவினர்களுக்கும் திரையரங்கு ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பை அளித்ததை தொடர்ந்து திரைப்படம் காண வந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுடன் நடிகர் பாலா மற்றும் பட குழுவினர்  புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | செப்டம்பரில் வெளியாகும் 13 படங்கள்! எதை, எந்த தேதியில் பார்க்கலாம்?

மேலும் படிக்க | காந்தி கண்ணாடி மூலம் ஹீரோவான KPY பாலா! வெளியானது படத்தின் பர்ஸ்ட் லுக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News