Getti Melam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகாத் தொடர் கெட்டிமேளம். இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் தியாவால் துளசி வெற்றிக்கு போன் செய்ய வெற்றி வீட்டில் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் தனக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை என சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது வெற்றி எப்படியாவது இந்த ஏற்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சொல்ல துளசி வெங்காயத்தை எடுத்து அக்கிளில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ஐடியா கொடுக்க வெற்றியும் அப்படியே செய்கிறான். மறுபக்கம் அஞ்சலி தூங்கிய பிறகு வெளியிலிருந்து முகமூடி அணிந்தபடி மகேஷ் வீட்டுக்குள் நுழைந்து உன்ன கிண்டல் பண்ணவங்கள நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்கிறான்.
மேலும் படிக்க | கூலி படத்துக்கு ஆப்பு! தள்ளிப்போகும் ரிலீஸ்? காரணம் இதுதான்..
அடுத்த நாள் வெற்றிக்கு காய்ச்சல் வந்திருக்க வெற்றி துளசி சொன்னது உண்மையாகவே நல்ல ஐடியா என நினைத்துக் கொள்கிறான். பிறகு வீட்டில் உள்ளவர்கள் என்னடா இன்னும்
ரெடியாகாமல் இருக்க என்று வெற்றியின் ரூமுக்கு வர அதன் காய்ச்சலோடு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் காய்ச்சல் சரியானதும் மாப்பிள்ளை பார்க்க வர சொல்லலாம் என முடிவெடுக்கின்றனர். வெற்றி இப்படியெல்லாம் பண்ண மாட்டானே என்று மீனாட்சிக்கு மட்டும் ஒரு சந்தேகம் இருக்கிறது.
இவர்கள் எல்லோரும் வெளியே கிளம்பியதும் வெற்றி பெட்டின் மீது ஏறி ஆட்டம் போட்டு அமர்க்களம் செய்கிறான். அடுத்ததாக ரகுராம், கவிதா வீட்டில் யாரிடமும் சொல்லாமல் லோன் எடுப்பதற்காக பேங்க் ஒன்றுக்கு வருகின்றனர். கேசவன் மற்றும் தீபா என இருவரும் வீட்டில் சொல்லி விட்டு இதே பேங்க்கிற்கு லோன் எடுக்க வருகின்றனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்களா இல்லையா என பில்டப்களுடன் காட்சிகள் நடக்கின்றன. மறுபக்கம் மகேஷ் சந்தோஷமாக பேப்பர் படித்துக் கொண்டிருக்க அஞ்சலி காபி கொண்டு வருகிறாள்.
நீங்க நேத்து நடந்ததை நினைத்து டென்ஷனா இருப்பீங்கன்னு நினைத்தேன். ஆனா எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருக்கீங்க ரொம்ப நல்லது என அஞ்சலி சொல்ல மகேஷ் கடவுள் அவங்க மூணு பேருக்கும் தண்டனை கொடுத்துட்டான் அஞ்சலி என பேப்பரைக் காட்ட அதில் அவர்கள் விபத்தில் சிக்கி ஹாஸ்பிடல் தீவிர சிகிச்சையில் இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதை பார்த்தது அஞ்சலி அதிர்ச்சி அடைகிறாள். அவங்களுக்கு தண்டனை கிடைக்கணும் தான் ஆனால் இது ரொம்ப கஷ்டமா இருக்கு என சொல்கிறாள். பிளாஷ்பேக்கில் மகேஷ் தான் முகமூடி அணிந்து சென்று அவர்களை தனது காரால் மோதினான் என்பது தெரிய வருகிறது.
அதன் பிறகு துளசி ஆபீஸ் கிளம்பி செல்ல வெற்றி வழியில் வந்து உங்களுக்கு வேலை கிடைத்து விட்டதாக அத்தை சொன்னாங்க என கிப்ட் கொடுக்கிறான். மேலும் உங்களை நான் ஆபீஸ்ல டிராப் பண்ணட்டுமா என்று கேட்க துளசி அவனை திட்டி அனுப்புகிறாள். பிறகு வெற்றி என்ன தெரியாமல் அவனுக்கே போன் செய்து அத்தனை பாலோ செய்யும் வெற்றியை எச்சரிக்க சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பை ரிஜெக்ட் செய்த பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ