)
தி காட்ஃபாதர் எனும் ஹாலிவுட் படம் மூலம் உலகறிந்த பிரபலமானவர் அல்ஃபசினோ. நியூ யார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் பிறந்த இவர் பல்வேறு சோதனைகளை கடந்து 1940களில் திரையுலகிற்குள் நுழைந்தார். 1942ஆம் ஆண்டு வெளியான தி காட்ஃபாதர் படத்தில் மைகில் கார்லேன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அன்றிலிருந்து இப்போது வரை, தொடர்ந்து படங்களில் இவர் நடித்து கொண்டுதான் இருக்கிறார். இவருக்கு வயது 83 ஆகிறது.
53 வயது இளையவருடன் காதல்...
இப்போது வரை சினிமாவில் ‘கின்’னென்று நடித்து வரும் அல் பசினோ, நிஜ வாழ்க்கையிலும்‘கிங்’ஆக இருக்கிறார். இவர், தன்னை விட 53 வயது இளைய பெண்ணை காதலித்து வருகிறார். இவரது பெயர் நூர் அலாஃபா. நூர்-அல் பசினோ இருவரும் கடந்த ஆண்டு முதல் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பட விழா ஒன்றின் டின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இருவருக்குள்ளும் பற்றிகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இவர்கள் கொரோனா காலத்திலும் ஒன்றாக சுற்றியதாக சில தகவல்கள் கூறுகின்றன.
8 மாத கர்பம்..!
அல் பசினோ மற்றும் நூர் அலாஃபா தங்களது குழந்தையை எதிர்நோக்கி காத்துக்கொண்டுள்ளனர். அல் பசினோவிற்கு இது 4ஆவது குழந்தையாகும். இவருக்கு ஏற்கனவே 33 வயதில் ஒரு மகளும் 22 வயதுடையை இரட்டை சகோதர-சகோதரிகளும் உள்ளனர்.
அல் பசினோவின் முந்தைய காதல்கள்:
வாலிபத்தின் மன்னவனாக திகழும் அல் பசினோ இப்போது இருப்பதை விட இளமையில் மிகவும் துடிப்புடன் இருந்துள்ளார். நடிப்பு பயிற்சியாளரான ஜேம் டாரண்ட் என்பவர் மூலமாக ஜூலி மேரி என்ற முதல் குழந்தைக்கு தந்தையானார். பின்னர், பெவர்லி டி ஏஞ்சலோ எனும் நடிகையின் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு 2001 ஆம் ஆண்டு தந்தையானார். அடுத்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தந்தையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தந்தையாக இருப்பது குறித்து அல் பசினோ கூறுவது..
தற்போது நான்காவது முறையாக தந்தையாகவுள்ள அல் பசினோ, சில வருடங்களுக்கு முன்னர் பிரபல ஆங்கில நாளிதழான நியூ யார்கர் எனும் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் தந்தையாக இருப்பது குறித்து பேசியிருந்தார். அப்போது, “நான் எனது குழந்தைகளுக்கு பொருப்பான அப்பாவாக உள்ளேன்” என்று கூறியிருந்தார்.
வயது மூத்தவர்களை டேட்டிங் செய்யும் நூர் அலாஃபா..
அல் பசினோவின் தற்போதைய காதலியாக உள்ள நூர் அலாஃபா, இதற்கு முன்னர் மைக் ஜேகர் என்பவரை டேட்டிங் செய்து வந்தார். இவர்கள் 2017-2018ஆம் ஆண்டில் காதலித்து வந்தனர். அப்போது மைக்கின் வயது79. 2018ஆம் ஆண்டில் இவர்கள் பிரிந்ததாக கூறப்படுகிறது. நூர் அலாஃபாவும் திரைத்துறையில்தான் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இவர், குறும்படங்களை தயாரித்து வழங்கி வருகிறாராம். தன்னை விட 53 வயது நடிகருடன் காதலில் விழுந்த நூர் அலாஃபாவை பலரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
ஹாலிவுட்டில் காதலுக்கு வயது தடையில்லை!
ஹாலிவுட் பிரபலங்கள் பலர், தங்களை விட வயதில் மூத்தவர்கள்-இளையவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் காதலித்து வருகின்றனர். பாப் இசையின் ராணி என்று அழைக்கப்படும் மடோனா தன்னை விட 35 வயது இளையவரை காதலித்து வருகிறார். பிரபல ஹாலிவுட் நடிகரான ஜார்ஜ் க்லூனி தன்னைவிட 17 வயது இளைய நடிகையை கதலித்து வருகிறார். இது போல வயத் வித்தியாசமின்றி காதலித்து வரும் பிரபலங்களின் லிஸ்ட், நீண்டு கொண்டே போகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ