குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ரூ.150 கோடி சம்பளம்! ஆனா த்ரிஷாவுக்கு இவ்ளோ கம்மியா?

Good Bad Ugly Ajith Kumar Trisha Salary : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்த படத்தில் நடித்துள்ளவர்களின் சம்பள விவரங்களும் வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 10, 2025, 12:22 PM IST
  • அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி
  • அஜித்தின் சம்பளம் 150 கோடி..
  • த்ரிஷாவின் சம்பளம் இவ்வளவுதானா?
குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு ரூ.150 கோடி சம்பளம்! ஆனா த்ரிஷாவுக்கு இவ்ளோ கம்மியா?

Good Bad Ugly Ajith Kumar Trisha Salary : அஜித் குமார் ஹீரோவாக நடித்திருக்கும், குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடித்தவர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில் அஜித்தை விட த்ரிஷாவுக்கு இவ்வளவு சம்பளம் கம்மியா என்று கேள்வியும் எழுந்துள்ளது.

Add Zee News as a Preferred Source

குட் பேட் அக்லி:

பல ஆண்டுகளாக, அஜித்தின் கம்-பேக்கிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கைவிரித்து விட்டது. இந்த நிலையில், அனைவரும் நம்பியிருந்தது, ஆதிக் ரவிச்சந்திரனை மட்டும்தான். காரணம், அவர் இதற்கு முன்பு மார்க் ஆண்டனி படம் மூலம் பெரிய ஹிட் கொடுத்தார் என்பதை தாண்டி, அஜித்தின் பெரிய ரசிகரும் கூட.

தமிழ் திரையுலகில் இப்போது டாப் இயக்குநர்களாக இருக்கும் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் ஒவ்வொரு பெரிய நடிகர்களின் ரசிகர்களாகத்தான் இருந்திருக்கின்றனர். அவர்களை வைத்து, விக்ரம், பேட்ட போன்ற படங்களையும் எடுத்திருக்கின்றனர். அந்த வகையில், ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை சம்பவம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு, குட் பேட் அக்லி படம் அஜித்திற்கு அவரது மார்கெட்டை தூக்கிவிட உதவும் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் சம்பளம்..

தமிழ் சினிமாவில் தற்போது, அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விளங்குபவர் அஜித்குமார். முன்னர் லட்சங்களில் வாங்கிக்கொண்டிருந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கோடிகளை தாண்டி விட்டார். இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் அவர் நடித்திருந்த விடாமுயற்சி படம் வெளியானது. அந்த படத்திற்காக இவர், ரூ.105 கோடி வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது குட் பேட் அக்லி படத்திற்காக அந்த சம்பளத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே உயர்த்தியிருக்கிறார். இவருக்கு, இந்த படத்தில் நடிக்க சுமார் ரூ.150 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

த்ரிஷாவின் சம்பளம்..

தென்னிந்திய சினிமாவின் ‘குயின்’ என்று அழைக்கப்படுபவர், நடிகை த்ரிஷா. 41 வயதாகும் த்ரிஷா, கடந்த 20 வருடங்களாக ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் ஏற்கனவே அஜித்துடன் சேர்ந்து ஜீ, என்னை அறிந்தால், கிரீடம், மங்காத்தா, விடாமுயற்சி உள்பட பல படங்களில் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது குட் பேட் அக்லி படத்திலும் அவருக்கு மனைவியாக ‘ரம்யா’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அஜித்திற்கு ரூ.150 கோடிக்கும் மேல் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், த்ரிஷாவிற்கு ரூ.4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக திரை வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.

படம் எப்படியிருக்கிறது?

குட் பேட் அக்லி திரைப்படம், முழுக்க முழுக்க பழைய பாடல்களாலும், மீம் ரெஃபரன்ஸ்களாலும் ஆனதாக இருக்கிறது. இதை தாண்டி, படம் என்டர்டெயினிங் ஆக இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது. அர்ஜுன் தாஸின் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம், கண்டிப்பாக வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | குட் பேட் அக்லி விமர்சனம்: படம் எப்படி இருக்கு? வெற்றியா? சொதப்பலா?

மேலும் படிக்க | ரூ.500 கோடி வசூலை எகிறும் குட் பேட் அக்லி.. மிகப் பெரிய பிரபலம் கருத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News