'குட் பேட் அக்லி' ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில்.. எப்போது வெளியாகிறது?

GBU OTT Release: நடிகர் அஜித்தில் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஓடிடி அப்டேட் வெளியாகி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 21, 2025, 06:48 PM IST
  • குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியானது
  • தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது
'குட் பேட் அக்லி' ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில்.. எப்போது வெளியாகிறது?

பிரபல நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தை த்ரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், மார்க் அண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, பிரபு, சுனில், யோகி பாபு, அர்ஜூன் தாஸ், பிரியா வாரியார், ராகுல் தேவ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசைமைத்து உள்ளார். 

Add Zee News as a Preferred Source

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் அஜித்குமாரின் ரசிகர்களை திருப்தி அடைய செய்தது. பொது பார்வையாளர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், குட் பேட் அக்லி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படமும் ஓரளவான வரவேற்பையே பெற்றது. ஆனால் அஜித்தின் ரசிகர்களை திருப்திபடுத்தியதால் தப்பித்தது. 

இந்த சூழலில், 'குட் பேட் அக்லி' படத்தின் டிஜிட்டல் உரிமையை ஏற்கனவே பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி பல கோடி ரூபாய் கொடுத்து தன் வசமாக்கியது. இந்த நிலையில், படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து லேட்டஸ்ட் அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது. 

அதன்படி, இப்படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல் இப்படம் வரும் மே 9 ஆம் தேதி அல்லது மே 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 90 கோடிக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் மற்றும் மற்ற சினிமா ரசிகர்கள் இப்படத்தை வீட்டில் காண தயாராகி வருகின்றனர். 

மேலும் படிங்க: கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அஞ்சலியை வேவு பார்க்கத் தொடங்கும் மகேஷ்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி

மேலும் படிங்க: 51 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News