Good ad Ugly Box Villan: கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த வில்லன் அர்ஜூன் தாஸ் இல்லயாமாம். அப்போ யார் அந்த நடிகர் என்பதை இங்கே காணலாம்.
குட் பேட் அக்லி படம்:
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநராக இருப்பவர், ஆதிக் ரவிச்சந்திரன். இவர், ஒரு இயக்குநர் என்பதை தாண்டி, நடிகர் அஜித்தின் பெரிய ரசிகர் ஆவார். இவர் தற்போது குட் பேட் அக்லி படத்தை நடிகர் அஜித்தை வைத்து இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.
கிளாசிக் அஜித்தை திரையில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று பலர் புலம்பி வந்த நிலையில், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இந்த குறையை அவர் தீர்த்துள்ளார். இதில், அஜித் கேங்க்ஸ்டர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம் இது. குட் பேட் அக்லி படத்தை ரசிகர்கள் தற்போது வரை கொண்டாடி வருகின்றனர். படத்தில் இன்றைய ட்ரெண்ட்க்கு ஏற்றபடி சில காட்சிகளையும் வைத்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
குட் பேட் அக்லி நடித்த நடிகர் நடிகைகள்:
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க த்ரிஷா, தெலுங்கு நடிகர் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, பிரியா பிரகாஷ் வாரியார், சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் எப்படி?
குட் பேட் அக்லி திரைப்படம், முழுக்க முழுக்க பழைய பாடல்களாலும், மீம் ரெஃபரன்ஸ்களாலும் ஆனதாக இருக்கிறது. இதை தாண்டி, படம் என்டர்டெயினிங் ஆக இருப்பதாகவும் விமர்சனங்கள் வெளியாகி இருக்கிறது. அர்ஜுன் தாஸின் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம், கண்டிப்பாக வெற்றி அடையும் என்று கூறப்படுகிறது.
வசூல் நிலவரம்:
இதனிடையே இந்த படம் வெளியாகி தற்போது வரை வசூலில் சாதனை படைத்து வருகிறது. அதன்படி தற்போது இந்த படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் நடிக்கவிருந்த நடிகர்:
இந்நிலையில் இந்த படத்தில் வில்லன் ரோலில் பட்டையை கிளப்பி இருந்தார் அர்ஜூன் தாஸ். குறிப்பாக இரட்டை வேடத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் இந்த படத்தில் முதன் முதலில் வில்லன் ரோலில் நடிக்கவிருந்தது நடிகர் எஸ்.ஜே. சூர்யா தான் என்று கூறப்படுகிறது. ஆனால் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதனால் அர்ஜுன் தாஸ் வில்லனாக கமிட்டானார்.
மேலும் படிக்க | OTT-யில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படங்கள்.. எந்த தமிழ் படம் முதல் இடத்தில் இருக்கு?
மேலும் படிக்க | குட் பேட் அக்லி.. 4 நாட்கள் வசூல் நிலவரம் என்ன.. இதோ முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ