ஜி.வியின் ’ஜெயில்’ படத்துக்கு சிக்கல்? வசந்தபாலன் கொடுத்த அப்டேட்

ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ’ஜெயில்’ திரைப்படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 30, 2021, 08:32 PM IST
ஜி.வியின் ’ஜெயில்’ படத்துக்கு சிக்கல்? வசந்தபாலன் கொடுத்த அப்டேட்

வெயில், அங்காடி தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் வசந்த பாலன், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ’ஜெயில்’ திரைப்படத்தை புதிதாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 
க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். 

ALSO READ | வெளியானது ‘83’ டிரெய்லர்- படம் ரிலீஸ் எப்போது?

அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 9 ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், இந்த திரைப்படத்தை வெளியிட தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் படத்தை தயாரித்துள்ள கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை, ஒடிடி உரிமை,சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை, தங்கள் நிறுவனத்துக்கு வழங்கியதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்தை மீறி திரைப்படத்தை வெளியிடுவதாகவும் தெரிவித்தது.

ALSO READ | ஒரே வருடத்தில் வெளியாகபோகும் விக்ரமின் 4 படங்கள்!

இதனால் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால், படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இது குறித்த புதிய அப்டேட்டை படத்தின் இயக்குநர் வசந்தபாலன் இப்போது வெளியிட்டுள்ளார். அதில், ஜெயில் திரைப்படத்துக்கு எழுந்த சிக்கல் குறித்து திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தன்னிடம் விசாரித்ததாக தெரிவித்துள்ளார். சிலர் படத்துக்கு எழுந்த சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் என வேண்டிக் கொண்டதாக தெரிவித்துள்ள வசந்தபாலன், படத்துக்கு எழுந்திருந்த சிக்கல் தீர்க்கப்பட்டுவிட்டதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதனால், ஜெயில் திரைப்படம் திட்டமிட்டப்படி ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News