ஜி.வி.பிரகாஷ் பழகுவதற்கு இனிமையானவர்-திவ்ய பாரதி பேச்சு!

ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Mar 1, 2025, 07:15 PM IST
  • ஜிவி பிரகாஷின் கிங்க்ஸ்டன் படம்
  • திவ்யபாரதி சொன்னது..
  • என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
ஜி.வி.பிரகாஷ் பழகுவதற்கு இனிமையானவர்-திவ்ய பாரதி பேச்சு!

ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா-  பா. ரஞ்சித் - அஸ்வத் மாரிமுத்து - ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  

Add Zee News as a Preferred Source

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள 'கிங்ஸ்டன் ' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். உரையாடல்களை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ் எஸ் மூர்த்தி வடிவமைக்க, அதிரடியான சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். 

கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினருடன் தமிழ் திரையுலகத்தின் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் சுதா கொங்காரா பேசுகையில், '' ஜீவி பிரகாஷ் குமாரை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். அன்றிலிருந்து இப்போது வரை ஏதாவது புதிதாக சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை போல் வேறு யாரிடமும் நான் பார்க்கவில்லை. அவர் சொன்னது மட்டும் இல்லாமல் செய்து காட்டியிருக்கிறார். இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும்.. சினிமாவில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே இருக்கிறார். இவருடைய தயாரிப்பு நிறுவனம் என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் போன்றது.

இங்கு ஏராளமான இளம் திறமையாளர்களை காண்கிறேன். இயக்குநர் கமல் பிரகாஷின் உழைப்பு திரையில் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்'' என்றார். 

திவ்யபாரதி பேச்சு:

நடிகை திவ்யபாரதி பேசுகையில், '' இந்த முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. 'பேச்சுலர்' திரைப்படத்திற்குப் பிறகு மூன்றாண்டுகள் கழித்து ஊடகத்தினரை சந்திக்கிறேன். அதனால் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். 

'கிங்ஸ்டன்' படத்தின் கதையை இயக்குநர் கமல் பிரகாஷ் என்னிடம் சொல்லும் போது.. எந்த மாதிரியான தோற்றத்தில்.. கதாபாத்திரமாக திரையில் தோன்ற வேண்டும் என்பதற்கான முன்மாதிரி வீடியோ ஒன்றினை காண்பித்தார். அதை பார்த்தவுடன் இந்த படத்தில் நிச்சயம் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். 
'பேச்சுலர்' படத்திற்குப் பிறகு ஜீவி பிரகாஷ் குமாருடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்திருக்கிறேன். மிகவும் இனிமையாக பழகக்கூடியவர். நான் சில படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.  ஜீவி பிரகாஷ் குமாருடன் நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் வெளியாகிறது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 

இயக்குநர் கமல் பிரகாஷ் மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். நிதானமானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் யாரிடமும் அதிர்ந்து பேசி நான் பார்த்ததே இல்லை. இதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக இயக்குநர்களுக்கு நிறைய டென்ஷன் இருக்கும். 

இப்படத்தின் படப்பிடிப்பு 70 நாட்கள் நடைபெற்றது. ஒரு நாள் கூட ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய் என்னிடம் பேசவே இல்லை. வேலையில் கவனமாக இருப்பார். 

இப்படத்தின் படப்பிடிப்பின் போது தண்ணீரில் நனைந்து கொண்டே இருப்போம். எனக்கு தலை முடி நீளம் அதிகம் என்பதால் எப்போதாவது சின்ன அசௌகரியம் ஏற்பட்டாலும் உடன் நடிக்கும் நடிகர்கள் சகஜமாக பேசி அதனை இயல்பாகி விடுவார்கள். அதனால் அவரர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் நானும் சில ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறேன். கிங்ஸ்டன் திரைப்படம் ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை சிறப்பாக வழங்கும். அனைவரும் மார்ச் ஏழாம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தாருங்கள்.'' என்றார்.

மேலும் படிக்க | பைரதி ரணகாள் படத்தை ஓடிடியில் பார்க்கலாம்! எந்த தளத்தில் தெரியுமா?

மேலும் படிக்க | கிரிப்டோ கரன்சி விவகாரம்.. நடிகை தமன்னா பரபரப்பு அறிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News