Kingston Director Kamal Prakash About Shooting Experience : இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தற்போது நடிகராக அவரது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்துள்ளார்.அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். இப்படம் நாளை வெளியாகிறது.
இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் கமல் பிரகாஷ் பகிர்ந்து கொண்டது, "படத்தில் 3000 விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளன. தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் செட் படம் இது. சிஜி சிக்கல்களை தவிர்ப்பதற்காக பேய் கதாப்பாத்திரத்தில் வருபர்களுக்கு தத்ரூபமாக மேக்கப் போடப்பட்டுள்ளது.அந்த மேக்கப்பை அதை அகற்ற 8 மணி நேரம் செலவிட்டனர்.
பிரமாண்டமான செட்டில் 21 நாட்கள் படப்பிடிப்பு நடைப்பெற்றது.பெரிய அமைப்பில் மழை, பனி போன்ற செட்டப் அமைக்கப்பட்டது. ஆனால் 21 நாட்களிலேயே நாங்கள் படத்தின் இரண்டாம் பாதியை முடித்துவிட்டோம்.
நாங்கள் நீருக்கடியில் படப்பிடிப்பு செய்தோம். இதற்காக கேமராவிற்காக பம்பாய் குழுவிலிருந்து நிபுணர்களை அழைத்து வந்தோம்.இதுவரைக்கும் கடலுக்குள் யாரும் படம் எடுத்ததில்லை.
கடலுக்கு அடியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பிரம்மாண்டமாக இருக்கும். இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். ஒரு மீனவ கிராமத்தால் மீன் பிடிக்க உள்ளே போக முடியாது. அதன் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட கதையாக இந்தப் படம் உள்ளது” என்று கூறினார்.
படம் எப்படியிருக்கு?
கிங்ஸ்டன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இணையம் முழுவதும் தங்களது விர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் பாதி முழுவதும் காதல்-ரொமான்டிக் காட்சிகள் நிறைந்திருப்பதாகவும், இரண்டாம் பாதி த்ரில்லிங்காக பயமுறுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி வருகின்றனர். இரண்டாம் பாதியின் பெரும்பாலான காட்சிகள், கடலில் படமாக்கப்பட்டுள்ளதாம். இந்த காட்சிகள் பார்க்க பிரமிப்பூட்டும் வகையில் இருப்பதாக சிலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
கிங்ஸ்டன் படத்தின் கதை வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதையில் ஆங்காங்கே கொஞ்சம் ஓட்டைகள் இருந்தது குறித்தும் ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். 2025-ன் முதல் 3 மாதங்களில் வெளியாகி, ஹிட் ஆன படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று சிலர் கணித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கிங்ஸ்டன் படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் X தள விமர்சனம்..
மேலும் படிக்க | ஜி.வி.பிரகாஷ் பழகுவதற்கு இனிமையானவர்-திவ்ய பாரதி பேச்சு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









