Kingston Movie OTT Release : தமிழ் மெகா பிளாக்பஸ்டர் 'கிங்ஸ்டன்' திரைப்படம் ஒரு பிரபலமான ஓடிடி தளத்தில், ஏப்ரல் 13 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
தமிழின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற "கிங்ஸ்டன்" திரைப்படத்தை, வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்த திரில்லர் திரைப்படம், கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்தது. திரையரங்குகளில் பெரு வெற்றி பெற்ற இப்படம், ZEE5 டிஜிட்டல் வெளியீடு மூலம், ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.
கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், அந்த ரௌடி, கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன் நண்பர்களுடன் துணிந்து நுழைகிறான். அந்த சாபத்தின் ரகசியத்தை அவன் கண்டுபிடித்தானா? தன் கிராமத்தை மீட்டானா? என்பது தான் இந்தப்படத்தின் கதை.
ZEE5 இன் SVOD தெற்கு துணைத் தலைவர் லயோட் சேவியர் கூறுகையில், தமிழ் சினிமா இப்போது மிகப்பெரிய வெற்றிப்பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், அட்டகாசமான என்டர்டெயினர் திரைப்படமான, "கிங்ஸ்டன்" படத்தை, எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்தப்படம், ஒரு புதுமையான களத்தில், அதிரடி திரில்லராக ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு ரசிகர்களைக் கூட்டிச் செல்கிறது. இந்தப்படம் கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும், இது போல் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்குவோம்.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது, "கிங்ஸ்டன் பல வழிகளில் சவாலாக அமைந்த மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் - கிங்ஸ்டன் துணிச்சலானவன், கணிக்க முடியாதவன், இயற்கைக்கு அப்பாற்பட்ட ரகசியங்கள், மாய விசயங்களுக்குள் சிக்கிக் கொள்கிறான். தமிழ் சினிமா அரிதாகவே சொல்லும் இந்தக்களத்தில், அதிரடி, மர்மம் மற்றும் நாட்டுப்புறக் கதைக்களத்தில் ஒரு புதுமையான கதையை இந்தப்படம் சொல்கிறது. இப்படத்திற்குத் திரையரங்குகளில் ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. இப்போது ZEE5 மூலம் இப்படத்தை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவதைக் காண ஆவலாக உள்ளேன்.
இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியதாவது, இந்தப் படம் அன்பான குழுவின் உழைப்பு. மர்மம், அதிரடி மற்றும் ஃபேண்டஸி அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தரும் படைப்பு இது. இப்படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, ஆனால் திரையரங்குகளில் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பு எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பு வியக்கதக்கதாக இருந்தது. தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு, மிகப்பிரமாதமாக, தனித்துவமான நடிப்பைத் தந்தார். இந்த வேடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ZEE5 மூலம் இப்படம் அனைத்து மக்களையும் சென்றடையவுள்ளது, மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் இப்படம் புதுமையான அனுபவத்தைத் தரும்.
ஃபேண்டஸி கலந்த இந்த அற்புதமான திரைப்படத்தை, ZEE5 இல் பிரத்தியேகமாக ஏப்ரல் 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் கண்டு களிக்கலாம்.
மேலும் படிக்க | கிங்ஸ்டன் படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் X தள விமர்சனம்..
மேலும் படிக்க | இந்த வார ஓடிடி ரிலீஸ்! எல்லாமே புது படங்கள்..எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









