GV Prakash Kingston X Review : இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தற்போது நடிகராக அவரது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கமல் பிரகாஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
நல்ல திரைக்கதை..
படம் பார்த்த ரசிகர் ஒருவர், படத்தின் திரைக்கதை வசீகரிக்கும் வகையில் இருப்பதாக எழுதியிருக்கிறார்.
#Kingston - Engaging Screenplay & BGM Visual Super
Flashback Scene #GVPrakash Acting Super pic.twitter.com/fkuqFmYuze— Movie Tamil (@MovieTamil4) March 7, 2025
மேலும், படத்தின் பின்னணி இசை நன்றாக இருப்பதாகவும் காட்சியமைப்புகள் தரமாக இருப்பதாகவும் பேசியிருக்கிறார்.
முதல் பாதி ரொமான்ஸ்..
திவ்யபாரதியும் ஜிவி பிரகாஷும் ஏற்கனவே பேச்சுலர் திரைப்படத்தில் ஒன்றாக சேர்ண்டு நடித்திருந்தனர். அப்போதே இவர்களின் கெமிஸ்ட்ரி பயங்கரமாக இருப்பதாக சிலர் பேசி வந்தனர். தற்போது கிங்க்ஸ்டர் படத்திலும் அதுவே தொடர்ந்திருக்கிறது.
First half romantic portions and Second half thrilling elements it seems#Kingston #GVPrakash #DivyaBharathi https://t.co/lUMLNEWo6H
— Amal Thilak (@amal__thilak) March 7, 2025
முதல் பாதி ரொமாண்டிக் ஆகவும், இரண்டாம் பாதி த்ரில்லர் அனுபவம் கொடுப்பதாகவும் இருப்பதாகவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இடைவேளை பயங்கரம்..
தமிழ் திரையுலகை பொறுத்தவரை பல படங்களில் இடைவேளை காட்சி ஒரு ட்விஸ்ட் உடன் முடிவடையும். அப்படி, இந்த படத்திலும் இடைவேளை காட்சி நன்றாக இருப்பதாக சிலர் கூறியிருக்கின்றனர்.
Banger interval
Inga na thanda king uh #Kingston @gvprakash pic.twitter.com/SsjnB7X1yZ— Vignesh (@callme_dexter) March 7, 2025
இந்த ரசிகர், “இங்க நான்தான்டா கிங்கு” என்ற டைலாக்குடன் இப்பதிவை வெளியிட்டிருக்கிறார்.
பயமா இருக்கு..
கிங்க்ஸ்டன் படத்தை பார்த்த ஒரு ரசிகர், திரைக்கதை பயங்கராமாகவும் பயமாகவும் இருப்பதாக கூறியிருக்கிரார்.
#Kingston 2nd Half:- theeyaaana making & Scary ana screenplay boat scene ahh vechi oru mirattu mirattitaan.... pic.twitter.com/e0mbHz93dz
— SRS CA TV (@srs_ca_tv) March 7, 2025
குறிப்பாக கப்பலில் செல்லும் காட்சிகள் மிரட்டலாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
3.5 மார்க் கொடுக்கலாம்..
ஒரு ரசிகர், இந்த படத்திற்கு 3.5 மார்க் கொடுக்கலாம் என கூறி பதிவிட்டு இருக்கிறார்.
#Kingston - 3.5 stars. @gvprakash’s big screen spectacle is a well-executed sea adventure thriller built around the theme of human greed. Well thought-out tale that explores the horrors of generational greed. The second half, which is completely set in sea, is breathtakingly shot… pic.twitter.com/IbZZEVlnQt
— Haricharan Pudipeddi (@pudiharicharan) March 7, 2025
மனிதர்கள், தங்களின் சுய லாபத்துக்காக என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை பயமுறுத்தும் வகையில் இப்படத்தில் நன்றாக கூறியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். கடல் சார்ந்த காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | நல்ல நாவல் படித்த உணர்வு..ஷ்யாமின் அஸ்திரம் படம் எப்படி? திரை விமர்சனம்..
மேலும் படிக்க | NEEK Movie Review: நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: திரை விமர்சனம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









