ஜிவி பிரகாஷ் - சீனு ராமசாமி கூட்டணியில் வெளியாகும் இடிமுழக்கம்!

 இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கானா விளக்கு மயிலே’ தற்போது வெளியாகி உள்ளது.

Written by - RK Spark | Last Updated : Apr 13, 2025, 04:49 PM IST
  • நடிகர் ஜிவி பிரகாஷின் ’இடிமுழக்கம்’.
  • இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.
  • விரைவில் திரைக்கு வர உள்ளது.
ஜிவி பிரகாஷ் - சீனு ராமசாமி கூட்டணியில் வெளியாகும் இடிமுழக்கம்!

ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கானா விளக்கு மயிலே’ பாடலை நடிகர்கள் ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அடுத்து, இவர் இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்திருக்கும் 'இடிமுழக்கம்' திரைப்படம், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | 2 வருடத்தில் 3000 கோடி வசூல் படங்களை கொடுத்த நடிகை! யார் தெரியுமா?

தற்போது படத்தில் இருந்து எனர்ஜிடிக்கான இரண்டாவது பாடலான ‘கானா விளக்கு மயிலே’ வெளியாகியுள்ளது. வைரமுத்து எழுதியுள்ள இந்த நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் இந்தப் பாடலை வெளியிட்டனர். படக்குழு இருவரின் வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

’இடிமுழக்கம்’ திரைப்படம் தென் மாவட்டங்களை மையப்படுத்திய பழிவாங்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இறைச்சி கடை உரிமையாளராகவும், காயத்ரி சங்கர் ஒரு செவிலியராகவும் நடித்துள்ளனர். சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். இயக்கியதோடு மட்டுமல்லாமல், சீனு ராமசாமி இந்த படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு முன்பே தயாரான இப்படம் தற்போது ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான கிங்ஸ்டன் படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்த படத்தை ஜிவி பிரகாஷ் தயாரித்து இருந்தார். சமீப நாட்களாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டும், இசையில் அதிக கவனமும் செலுத்தி வருகிறார் ஜிவி பிரகாஷ். கடந்த வாரம் வெளியான குட் பேட் அக்லி படத்திற்கு இசையமைத்து இருந்தார். ’இடிமுழக்கம்’ படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். படம் மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 5 நிமிட பாடலுக்கு 5 கோடி சம்பளம் வாங்கிய நடிகை! யாரு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News