பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். அதனைத் தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணி, தாராள பரபு, பார்க்கிங், லப்பர் பந்து என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். தற்போது நூறு கோடி வானவில், அந்தகாரம் உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், IDAA PRODUCTIONS தயாரிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாணின் 15வது படமாக உருவாகும் #HK15 படத்தின், அதிராகப்பூர்வ அறிவிப்பு போஸ்டர், தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகியுள்ளது.
புது வருடம். புதிய ஆரம்பம் . புதுமாதிரி Vibe.
A frame from the world of #HK15 with love. @VineethVarapra1 @PreityMukundan @karthikisc
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் pic.twitter.com/rjK3Rd5ts1
— Harish Kalyan (@iamharishkalyan) April 14, 2025
வித்தியாசமான களங்களில் தனித்துவமான கதாப்பத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்சன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
வடசென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ஹைப்பர் கான்செப்டில், வித்தியாசமான ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. லிஃப்ட் படம் மூலம் கவனம் ஈர்த்த, இயக்குநர் வினீத் வரபிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார். IDAA PRODUCTIONS பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, இன்னும் சில தினங்களில் முழுமையாக முடிவடையவுள்ளது. விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கவுள்ளது.
இரத்தம் தெறிக்க ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில் நுட்ப குழு விபரம்
தயாரிப்பு : IDAA PRODUCTIONS
இயக்கம் : வினீத் வரபிரசாத்
ஒளிப்பதிவு : கார்த்திக் அசோகன்
இசையமைப்பாளர்: பிரிட்டோ மைக்கேல்
எடிட்டர்: மதன் ஜி
நடனம்: பாபா பாஸ்கர்
மக்கள் தொடர்பு : Aim சதீஷ், சிவா
மேலும் படிக்க | நடிகை ஜனனிக்கு திருமணம்! மாப்பிள்ளை சூப்பரா இருக்காரே..இவரு யார் தெரியுமா?
மேலும் படிக்க | தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்.. வைரலாகும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









