Rajinikanth Lessor Known Facts : நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று பிறந்தநாள். இந்த நாள், அவருடைய ரசிகர்கள் கொண்டாடும் திருநாளாக பார்க்கப்படுகிறது. இப்படி, டிசம்பர் 12ஆம் தேதியை பெரிய விழாவாக கொண்டாடும் ரஜினி ரசிகர்கள், தன் தலைவரை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளவில்லை என்றால் எப்படி? இதோ அவர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய தகவலை, இங்கு பார்ப்போம்.
தமிழ் திரையுலகிற்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகிற்கே கிங் நடிகராக விளங்குகிறார் ரஜினி. இவர் நடிகர் மட்டுமல்ல, 90s மற்றும் 2k குழந்தைகளின் மிகப்பெரிய குழந்தைப்பருவத்தின் பெரிய பங்கும்தான். அதனாலேயே வருடா வருடம் டிசம்பர் 12ஆம் தேதி வரும் பாேது, அதை சாதாரண நாளாக கடந்து விடாமல், ரஜினியின் ரசிகர்கள் தங்களின் ஃபேவரட் ஆன நாளாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த வருடம், ரஜினிகாந்தின் பிறந்தநாள் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ஏன் தெரியுமா? இது, ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 50வது வருடத்தை நிறைவு செய்யும் ஆண்டாகும். இதனால், படையப்பா திரைப்படமும் இந்த வருடம் 25 வருடங்கள் கழித்து ரிலீஸ் ஆகிறது.
படையப்பா படத்தில் என்ன ஸ்பெஷல்?
படையப்பா திரைப்படம், ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 25 வருடத்தை காெண்டாடும் வகையில் வெளியானது. இப்போது அவரது 50வது வருட திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், மீண்டும் இப்படம் வெளியாக இருக்கிறது. அது மட்டுமன்றி, படையப்பா படம் ரஜினியின் கதையாகும். இதனை, ரஜினிதான் தயாரித்தார். இப்படம் குறித்து, சமீபத்தில் ரஜினி ஒரு வீடியோவில் பேசியிருந்தார். அப்போது அப்படத்தில் வந்த பல டைலாக்குகளை அந்த ஸ்பாட்டிலேயே பேசியதாகவும், இதன் ஒரிஜினல் க்ளைமேக்ஸை மாற்றி வேறு க்ளைமேக்ஸை எழுதியதாகவும் கூறியிருந்தார்.
ரஜினிகாந்தின் கதைகள்:
நடிகர் ரஜினிகாந்த், ஹீரோவாக மட்டுமல்ல கதை ஆசிரியராகவும் சில படங்களுக்கு இருந்திருக்கிறார். மேற்கூறிய படையப்பா படத்துக்கு மட்டும் கிடையாது, அருணாச்சலம், பாபா, வள்ளி என இவரது கதைகள் படங்களாக மாறி இருக்கின்றன. ஒன் லைன் ஸ்டோரி அல்லது ஒரு கதையாக எழுதி அதனை இயக்குனர்களிடம் ரஜினி கொடுத்துவிடுவார். அதன் பிறகு ஸ்கிரீன் ப்ளே எழுதி இயக்குனர்கள் அந்த படத்தை எடுத்து விடுவார்கள்.
பெயர் காரணம்..
நடிகர் ரஜினிகாந்தின் உண்மையான பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவரது பெயர் காரணம் யாருக்காவது தெரியுமா? இவருக்கு மராட்டிய ராஜா சத்ரபதி சிவாஜியின் நினைவாக பெயர் வைக்கப்பட்டதாம்.
தாய் மொழியில் நடிச்சதே இல்லை..
நடிகர் ரஜினிகாந்தின் தாய்மொழி மராத்திய மொழியாகும். அதன் பிறகு பெங்களூருவிற்கு வந்து கன்னடத்தையும் கற்றுக் கொண்டார். சென்னைக்கு வந்து தமிழ் பயின்றவர் இப்போது தமிழ் சினிமாவில் ராஜாதி ராஜாவாக இருக்கிறார். இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழிகளில் நடித்துவிட்டு ரஜினி தனது தாய் மொழியில் இதுவரைக்கும் ஒரு படம் கூட நடித்ததில்லை.
இந்தியில் ஜெயித்த தமிழ் ஹீரோ!
தமிழ் சினிமாவில் இருந்து இந்தி திரையாகிற்கு சென்று பல நடிகைகள் ஜெயித்துள்ளனர். ஆனால் நடிகர்கள் பலருக்கு பாலிவுட் கை கொடுத்ததில்லை. இந்த ட்ரெண்ட்டை செட் செய்தவர் ரஜினிகாந்த் தான். இவர் இந்தியில் நடித்திருந்த அந்தா கணுன் என்கிற திரைப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து ஓடியது. இவரையடுத்து தற்போது தனுஷிற்கு பாலிவுட் திரையுலகம் கைகொடுத்துள்ளது.
மேலும் படிக்க | 13 வயதில் ரஜினிக்கு அம்மாவாக நடித்த நடிகை! பின்னர் மனைவியாகவும் நடித்தார்..
மேலும் படிக்க | ரஜினிகாந்துக்கு சரளமாக தெரிந்த மொழிகள்…தமிழ் மட்டும் இல்ல! இத்தனையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









