HBD Vijay List Of Songs That Spoke Politics : நடிகராக மட்டும் இருந்த விஜய், 1 வருடத்திற்கு முன் தமிழக வெற்றிக்கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இப்போது அரசியல் கட்சியின் தலைவராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது சமீபத்திய படங்கள் அரசியல் பேசின என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அரசியல் குறித்து விஜய் எதுவும் வாய் திறவாத சமயத்திலேயே தனது இன்ட்ரோ பாடல்கள் மூலமாக அரசியல் பேசியிருக்கிறார். அவை என்னென்ன பாடல்கள் தெரியுமா?
சிவகாசி-கோடம்பாக்கம் ஏரியா:
சிவகாசி படத்தில் இடம் பெற்றிருந்த பாடல், ‘கோடம்பாக்கம் ஏரியா’. இந்த பாடல், நயன்தாரா ஒரு கட்சிக்காக வாக்கு சேகரிக்க வரும் போது விஜய்யுடன் ஆடும் பாடலாக இருக்கும். அதில், “ஹே கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாறியா..” என்று பாடல் தொடங்கும். கூடவே, ஸ்டாருங்க நாங்களும் ஓட்டு கேட்டா, யாருமே ஜாதிதான் பாப்பதில்ல” என்ற லைன் வர, பதிலுக்கு விஜய் “ஏழைங்க பாழைங்க நெனச்சிப்புட்டா, நாளைக்கு நீங்களும் சிஎம்முதான்” என்று பாடலில் பதில் கூறுவார். இப்போது இதே லாஜிக்கை வைத்து அவரும் அரசியலில் நிற்கிறார்.
வேட்டைக்காரன்: நான் அடிச்சா
2009ஆம் ஆண்டில் உருவான வேட்டைக்காரன் திரைப்படத்தில் விஜய்யின் இண்ட்ரோ பாடல் வரும். “நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட” என்ற இந்த பாடலில், விஜய் அரசியல் பேசியது மட்டுமல்லாது மக்கள் அல்லல் படுவதையும் பேசியிருப்பார். ”உணவு உடை இருப்பிடம் அனைவருக்கும் கிடைக்கனும், ஆலமரம் பள்ளிக்கூடம் ஆக்ஃபோர்டா மாறனும்” என்று முதல் சரணத்தில் இந்த லைன் இடம் பெற்றிருக்கும். அடுத்த சரணத்தில் அரசியல் கட்சிகளை அட்டாக் செய்யும் வகையில் “வரட்டி தட்டும் செவுத்துல வேட்பாளர் முகமடா..காத்திருந்து ஓட்டு போட்டு கருத்து போச்சு நகமடா..” என்ற வரி இடம் பெற்றிருக்கும்.
சர்கார்-ஒரு விரல் புரட்சி:
விஜய்க்கு அரசியல் மீது ஈடுபாடு இருக்கிறது என்பதை பெரிதாக வெளிக்காட்டிய படம் சர்கார். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் ஒரு விரல் புரட்சி. இதில், ஏழ்மையை ஒழிக்கவே ஏழையை ஒழிப்பதா, விரலின் நுனியில் விழட்டும் கருப்பு என பல்வேறு புரட்சிகரமான வரிகள் இடம் பெற்றிருக்கும்.
ஆடுங்கடா என்ன சுத்தி-போக்கிரி:
விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களுள் ஒன்று, போக்கிரி. இந்த படத்தில் அவரது இண்ட்ரோ பாடலாக இடம் பெற்றிருந்தது, “ஆடுங்கடா என்ன சுத்தி”. இதில், “பச்ச புள்ள பிஞ்சு விரல், அஞ்சுக்கும் பத்துக்கும் வேல செஞ்சா..” மற்றும் “தீ பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து இதுதான் என் கருத்து…” போன்ற வரிகள் சமூக பிரச்சனையை பேசுபவையாகவும், அவலங்களை தோலுரித்து காண்பிப்பவையாகவும் இருந்தன.
வாரிசு, லியோ, கோட் படங்களின் பாடல்கள்:
விஜய், அரசியலுக்கு வருவேன் என்று கூறும் முன்னர் வெளியான படங்கள் இது. இதில் இவருக்கு இண்ட்ரோ பாடல்களான வெளியான அனைத்து பாடல்களுமே அரசியல் வருகையை குறிப்பவையாக இருந்தன. வாரிசு படத்தில் “வா தலைவா வா தலைவா” எனும் பாடல் இடம் பெற்றிருந்தது. இது அவர் அரசியலுக்கு வருவதை குறிக்கும் வகையில் இருந்தது. அதே போல லியோ படத்தில் ‘நான் ரெடிதான் வரவா..’ எனும் பாடல் லியோ தாஸின் இன்ட்ரோவிற்காக இடம் பெற்றிருந்தது. அதுவும் “நான் உங்களுக்கான நிற்பேன்” என்று ரசிகர்களையும் மக்களையும் பார்த்து சொல்வது போல இடம் பெற்றிருந்தது.
அடுத்து கோட் படத்தில் “விசில் போடு” பாடல் இடம் பெற்றிருந்தது. அதில், “பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா..” என்ற வரி இடம் பெற்றிருக்கும். இந்த படம் வெளியான சமயத்தில் விஜய் தனது அரசியல் கட்சியை அறிவித்திருந்தார்.
மேலும் படிக்க | விஜய் பிறந்தநாள்.. ரீ-ரிலீஸ் செய்யப்படும் மாஸ் திரைப்படம், ரசிகர்களுக்கு ட்ரீட்
மேலும் படிக்க | முத்தமழை பாடலுக்கு பின்..அதிகம் கேட்கப்படும் 5 சின்மயி பாடல்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ