)
தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற வெப் சீரிஸ் 'ஹார்ட் பீட்'. இதன் இரண்டாவது சீசன் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டாரில் தொடங்கியது. இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ளும் விதமாக இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டது. இதில் பல எமோஷனலான தருணங்கள், வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் மருத்துவமனை வாழ்க்கையின் உண்மையான சித்தரிப்புடன் இருப்பதால் 'ஹார்ட் பீட்'டுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ஆர்கே மருத்துவமனையில் மூத்த மருத்துவராக ரீனா இருக்கிறார். தனது புதிய அணியை மிகவும் கட்டுபாடுடனும் அமைதியாகவும் வழிநடத்துகிறார். ஆனால், இந்த மருத்துவர் உலகத்திற்கு அப்பால் ரீனாவின் பழைய நண்பர்களுடனான அவரது விளையாட்டுத்தனமான நட்புறவையும் காட்டப்பட்டுள்ளது. இப்போது சேர்மனாக இருக்கும் அர்ஜுனுடனான அவளது சிக்கலான உறவு மற்றும் தனது தாயார் டாக்டர் ரதிக்காக ரீனா ஏங்குவது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கு இந்த சீசனில் விடை கிடைத்துள்ளது. முதல் சீசன் போலவே தற்போது இரண்டாவது சீசனிலும் பார்வையாளர்களுக்கு உணர்ச்சிகரமான தருணங்களை தந்துள்ளது.
தற்போது இந்த இரண்டாவது சீசனில் பல புதிய முகம் இடம்பெற்றுள்ளது. நிலோஃபர் (கனா காணும் காலங்கள் புகழ் அக்ஷதா), கிரண் (சிவம்), மற்றும் கமல் (அப்துல்), ரோஷினி (அமையா) மற்றும் புதிய தலைமை மருத்துவராக டி.எம். கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கிறனர். ரீனாவாக தீபா பாலு, டாக்டர் ரதியாக அனுமோல், தேஜுவாக யோக லட்சுமி, பாடினி குமார் அனிதாவாகவும், குணாவாக சர்வா, ராக்கியாக சபரீஷ், அர்ஜுனாக சாருகேஷ், நவீனாக ராம், தேவ்வாக சந்திரசேகர், ராமநாதனாக கிரி துவாரகேஷ், தியானேஷ், ரேயா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹார்ட் பீட் சீசன் 2வை தீபக் சுந்தரராஜன் எழுதி இயக்கியுள்ளார். ரெஜிமல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங், சரண் ராகவன் இசையமைத்துள்ளார். இந்தத் தொடரை ஏ டெலி ஃபாக்டரி புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் ராஜவேலு தயாரித்துள்ளார். ஆர்ஜே. ஷியாம் சுந்தர் நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இந்த சீரிஸ் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
ரீனா என்கிற பெண், தனது தாய் தந்தை யார்? தன்னை ஏன் அனாதையாக விட்டார்கள் என்கிற கேள்விக்கு பதில் தேடும் கதையாக ஹார்ட் பீட் சீரிஸ் துவங்கியது. இந்த சீரிஸ் வாராவாரம் வியாழக்கிழமை அன்று நான்கு எபிசோட்கள் ரிலீஸ் ஆகி வருகிறது. இந்த வெப் சீரிஸில் வரும் ரீனா, ரதி, அர்ஜுன், தேஜு, ராக்கி போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
ஹாட்ஸ்டார் ஸ்பெஷலஸில் வரும் ஒவ்வொரு வெப் சீரிஸும் 100 எபிசோட்கள் உடன் முடிவடையும். அதன்படி, ஹார்ட் பீட் வெப் சீரிஸ் சீசன் 2 இதுவரை 92 எபிசோடுகளை கடந்துள்ளது. அதன்படி இன்னும் கூடிய விரைவில் இரண்டாவது சீசன் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது.
இந்த நிலையில், ஹார்ட் பீட் சீசன் இரண்டவது சீசனின் படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி படப்பிடிப்பின் இறுதி நாளில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர்.
இதனிடையே 92வது அத்தியாயத்தின் முடிவில், தந்தையைப் பற்றிய உண்மை வெளிப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாத ரீனா, விபத்தில் சிக்கி மரணத்தின் விளிம்பில் போராடுகிறார். நம்பிக்கை இழந்த நிலையில் இருக்கும் கதாநாயகியின் எதிர்காலம் என்ன? அடுத்தடுத்த அத்தியாயங்கள் ரீனாவின் வாழ்க்கையை எப்படி மாற்றியமைக்கப் போகின்றன? என்பதை இனி வரும் எபிசோடில் என்னென்ன ட்விஸ்ட் எல்லாம் இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ