)
ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள 'ஹார்ட்டின்' திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார். ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் தங்கம் தென்னரசின் மகள் இமயா ஹீரோயின்களுள் ஒருவராக நடிக்கிறார்.
நடிகை மடோனா செபாஸ்டியன் பேசுகையில், ''இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்து போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை நீங்கள் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். 'ஹார்ட்டின்' படத்தை இதயப்பூர்வமாக 26ம் தேதியன்று தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்,'' என்றார்.
கிரியேட்டிவ் கன்சல்டன்ட் மணிமேகலை பேசுகையில், ''இப்படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினரும் கிரியேட்டர்கள் தான். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. ஒருத்தரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேர்ல் ஒருவரை மட்டும் லவ் பண்ணனுமா அப்படிங்கிற ஒரு சாய்ஸ் இல்லாமல்... லவ் பண்ணனுமா என்ற ஒரு சாய்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தால் வரும் என்று நினைக்கிறேன். இதுதான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றியது. இந்தப் படத்தை இதயத்தின் மூலமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் புரியும், பிடிக்கும்,'' என்றார்.
நடிகை இமயா டி (தங்கம் தென்னரசு மகள்) பேசுகையில், '' இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை கவர்ந்து விடும்.
இந்தப் படத்தின் மூலம் சனந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்,'' என்றார்.