அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள்! டாப் 3-யில் அட்லீ! எவ்வளவு தெரியுமா?

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதிலிருந்து அட்லி மீண்டும் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறி உள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Apr 12, 2025, 12:22 PM IST
  • அட்லீயின் அடுத்த படம்.
  • அல்லு அர்ஜுனை வைத்து இயக்குகிறார்.
  • விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள்! டாப் 3-யில் அட்லீ! எவ்வளவு தெரியுமா?

சங்கரின் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் அட்லி. தற்போது வரை ஐந்து படங்களை இயக்கியுள்ள அட்லீ ஐந்து படங்களையும் மெகா ப்ளாக் பஸ்டர்களாக மாற்றி உள்ளார். கடைசியாக அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் ஆயிரம் கோடி வசூல் செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்நிலையில் அட்லீ அடுத்து யாரை வைத்து இயக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்த நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனனை வைத்து ஒரு ஸ்கைஃபை திரில்லர் இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?

அட்லியின் வளர்ச்சி

ராஜா ராணி படத்திற்குப் பிறகு விஜய்யை வைத்து தெறி என்ற படத்தை இயக்கினார். ஒரு இளம் இயக்குனருக்கு விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளார் என்பதால் அட்லின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக தெறி படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதனை தொடர்ந்து மெர்சல் என்ற படத்தை இயக்கினார். இதில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தான் இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதியாக மாறினார். மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் மெர்சல் படமும் வசூலை வாரி குவித்தது. அதனை தொடர்ந்து மீண்டும் விஜயை வைத்து பிகில் என்ற படத்தை இயக்கினார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இரு மடங்காக வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனராக மாறினார் அட்லீ. அதன் பின்பு நீ நாட்களாக அட்லீயின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. தனது ஐந்தாவது படத்திலேயே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கம் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது. அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அட்லி ஜவான் படத்தை ஆயிரம் கோடி வசூல் செய்த படமாக மாற்றினார். அதிலிருந்து பாலிவுட் ஹீரோக்கள் தொடர்ந்து அட்லீயை எனக்கு படம் பண்ணி கொடுக்கும்படி கேட்டு வந்தனர். ஒரு தமிழ் இயக்குனருக்கு பாலிவுட்டில் மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் மாறியது.

அட்லீ சம்பளம்

படங்களின் வசூலை போலவே அட்லீனின் சம்பளமும் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்கும் அவரது 22 ஆவது படத்தை அட்லீ இயக்குகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது குறித்து வெளியான டீசரில் படம் பிரம்மாண்டமாக உருவாகிறது என்பது தெரிகிறது. இந்த படத்திற்காக அட்லீயின் சம்பளம் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது. ஜவான் படத்திற்கு 30 கோடி சம்பளம் வாங்கிய அட்லி, அல்லு அர்ஜுன் படத்திற்கு 110 கோடி சம்பளமாக வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் அட்லி. முதலிடத்தில் எஸ் எஸ் ராஜமௌலி ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்குகிறார், அதனைத் தொடர்ந்து சந்திப் ரெட்டி வங்கா ஒரு படத்திற்கு 100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது 110 கோடி சம்பளத்துடன் இந்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார் அட்லீ. தனது ஆறாவது படத்திலேயே நூறு கோடி சம்பளம் வாங்குகிறார் என்பதால் டாப் இயக்குனராக மாறி உள்ளார் அட்லீ.

மேலும் படிக்க | ரெடியா மாமே.. முதல் நாளில் ரூ.50 கோடி வசூல்.. அஜீத்-தின் குட் பேட் அக்லி பாசிட்டிவ் எனர்ஜி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News