இந்தியாவில் ஸ்டார் நடிகர்களை போலவே, இப்பொழுது ஸ்டார் இயக்குனர்களும் உள்ளனர். இவர்களது இயக்கத்தில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 10 இயக்குனர்களைப் பற்றி பார்ப்போம். இந்த பட்டியலில் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் இயக்குனர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பாலிவுட் இயக்குனர்கள்
வார், பதான் போன்ற பிரம்மாண்ட படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் பாலிவுட்டில் பிரபலமான இயக்குனராக உள்ளார். இவர் ஒரு படத்திற்கு 40 முதல் 50 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். அடுத்ததாக ஹர்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து வார் 2 என்ற படத்தை இயக்கியுள்ளார். பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவர் மூன்று முதல் ஐந்து வருடத்திற்கு ஒரு படத்தை இயக்கினாலும் ஒரு படத்திற்கு ரூபாய் 70 முதல் 75 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 3 இடியட்ஸ், பிகே போன்ற வித்தியாசமான படங்களை இயக்கும் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். அந்த வகையில் இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 80 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: திடீரென வைரலான தொட்டு தொட்டு பேசும் சுல்தானா! இந்த பாடல் எந்த படம் தெரியுமா?
தெலுங்கு இயக்குனர்கள்
புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான இயக்குனராக சுகுமார் உள்ளார். யாருமே எதிர்பார்க்காத விதத்தில் புஷ்பா படம் வசூல் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து வெளியான புஷ்பா 2 படமும் ஆயிரம் கோடி வசூல் செய்தது. தற்போது சுகுமார் ஒரு படத்திற்கு 50 முதல் 70 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். கேஜிஎப் என்ற ஒரு படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான இயக்குனராக பிரசாந்த் நீல் உள்ளார். கே ஜி எஃப் 2 மற்றும் சலார் போன்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் பிரசாந்த் நீல் ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் என்ற இரண்டே படங்களின் மூலம் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலமான இயக்குனராக மாறி உள்ளார் சந்திப் ரெட்டி வங்கா. இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 80 கோடி முதல் 100 கோடி வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்களை இயக்கிய ராஜமௌலி இந்தியா முழுவதும் போற்றப்படும் நம்பர் ஒன் இயக்குனராக உள்ளார். நான்கு முதல் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை படத்தை இயக்கினாலும் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது.
தமிழ் இயக்குனர்கள்
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக பார்க்கப்படும் சங்கர் ஒரு படத்திற்கு 55 கோடி முதல் 60 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ஹிட்டாகவில்லை என்றாலும் இன்னும் இவரது மவுசு குறையவில்லை. இவரது உதவி இயக்குனராக இருந்து தற்போது முன்னணி இயக்குனராக மாறியுள்ள அட்லீ ஒரு படத்திற்கு 50 முதல் 60 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்தார். தற்போது அல்லு அர்ஜுன் படத்திற்காக 110 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. தனது மூன்றாவது படத்திலேயே விஜய்யை வைத்து இயக்கிய லோகேஷ் கனகராஜ் இன்று முக்கியமான இயக்குனர்களின் பட்டியல் இணைந்துள்ளார். தற்போது கூலி படத்தை இயக்கி வரும் இவர் ஒரு படத்திற்கு 60 முதல் 70 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
மேலும் படிங்க: ஜிவி பிரகாஷ் - சீனு ராமசாமி கூட்டணியில் வெளியாகும் இடிமுழக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









