தமிழில் அறிமுகமாகும் 'HIT 3' புகழ் கோமலி பிரசாத்! எந்த படத்தில் தெரியுமா?

HIT 3 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள கோமலி பிரசாத் விரைவில் தமிழில் அறிமுகமாக உள்ளார். விஜய் சேதுபதி, தனுஷ் உடன் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : May 16, 2025, 07:29 AM IST
  • தமிழ் படத்தில் கோமலி பிரசாத்.
  • HIT 3 படத்தில் நடித்து இருந்தார்.
  • அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.
தமிழில் அறிமுகமாகும் 'HIT 3' புகழ் கோமலி பிரசாத்! எந்த படத்தில் தெரியுமா?

பல வகையான கதாபாத்திரங்களில் தனது முத்திரையைப் பதித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் கோமலி பிரசாத். அவரது சமீபத்திய ஹிட் படம் 'HIT 3'. இதில் அவரது ASP வர்ஷா கதாபாத்திரம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சவாலானது. இந்தப் பயணம் இனிமையானதாகவும் அதே சமயம் அட்வென்சராகவும் இருந்ததாக சொல்கிறார் கோமலி. "இந்த பவர்ஃபுல்லான ஆக்‌ஷன் பேக்ட் கதாபாத்திரம் பார்த்து ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்னை கண்கலங்க வைத்து விட்டது. இதேபோன்று இன்னும் பல கதாபாத்திரங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகி இருக்கிறது" என்றார். நானியுடன் இணைந்து நடித்திருப்பது மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம். அவர் ஒரு திறந்த புத்தகம் என்கிறார். "அவர் நடிகர் மட்டுமல்ல. எல்லாத் துறைகள் பற்றியும் அவருக்குத் தெரியும். சில ஆக்‌ஷன் மூவ்ஸூம் எனக்கு சொல்லித் தந்தார். பெரிய இன்ஸ்பிரேஷன்".

மேலும் படிக்க | ரவி மோகனுடன் திருமணத்திற்கு வந்த பெண்..யார் இந்த கெனிஷா? முழு தகவல் இதோ!

நேஷனல் லெவல் பாக்ஸர் அனில் உதவியுடன் ஆக்‌ஷன் சீக்வன்ஸூக்காக கடின பயிற்சியும் எடுத்துள்ளார் கோமலி. "நான் அதிக உயரம் இல்லை. என் உயரத்திற்கு இரு மடங்கு அதிகம் அடித்தால்தான் கன்வின்சிங்காக இருக்கும். அந்த சவாலை ஏற்றுக் கொண்டேன்". நடிகை மட்டுமல்லாது டெண்டிஸ்ட், நேஷனல் லெவல் அத்லெட் மற்றும் டான்ஸர் என்ற பல முகங்கள் கோமலிக்கு உண்டு. "மாநில அளவில கோ-கோ பிளேயர் நான். பல்கலைக்கழக அளவில் பேட்மிட்டன் விளையாடி தங்கம் வென்றிருக்கிறேன். அந்தப் பயிற்சி தான் காயம் பட்டாலும் அதைக் கடந்து வந்து ஷூட்டிங்கில் நடிக்க உதவியது. அதுமட்டுமல்லாது, கிளாசிக்கல் நடனமும் தியேட்டர் பயிற்சியும் உண்டு" என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, "படப்பிடிப்பு இல்லை என்றால் வீட்டில் என் செல்ல நாய் விஸ்கியுடன் இருப்பேன். இல்லை என்றால் குக்கிங், பெயிண்டிங், டிராவல் அல்லது ஆன்மீகத்தில் திளைத்திருப்பேன். ரொம்பவே சிம்பிள் பர்சன் நான்" என்றார். நடிக்க விரும்பும் கதாபாத்திரங்கள் குறித்து கேட்டபோது, "லவ் ஸ்டோரி அல்லது ஃபேமிலி டிராமா போன்ற ஃபீல் குட் கதைகளிலும் நடிக்க ஆசை உண்டு. ஆனால், ஸ்போர்ட்ஸ் பயோபிக் அல்லது எதாவது ஆர்மி ரோல் நிச்சயம் எனது கனவு".

தமிழ் படங்கள் மீதான காதல் பற்றி கேட்போது, "என்னுடைய ரிங் டோனே 'நானும் ரெளடிதான்' படத்தில் இருந்து 'நீயும் நானும்...' பாடல்தான். தமிழ் மொழி மீதுள்ள காதலால் சரளமாகப் பேசக் கற்றுக் கொண்டேன். ஆக்டிங் டிரைனர் சூரி எனக்கு திருக்குறள் சொல்லிக் கொடுத்து அதில் இருந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இயக்குநர்கள் சி. பிரேம்குமார், அல்ஃபோன்ஸ் புத்திரன், மணிகண்டன் மற்றும் GVM படங்களில் பணிபுரிய ஆசை. அதே போல நடிகர்கள் விஜய்சேதுபதி, தனுஷ் இவர்களைப் பார்த்து எப்போதும் வியப்பேன். அஜித் சார் எப்போதும் என் ஃபேவரிட். அவருடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். என்றென்றும் அவர் எனது இன்ஸ்பிரேஷன்" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | லேட்டஸ்ட் காதலியுடன் ஜெயம் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News