)
Hit Tamil Films Of 2025 In First 6 Months : 2025 ஆம் ஆண்டு முதல் பாதியை அதற்குள் கடந்து விட்டோம். ஜனவரி ஆரம்பித்து கடந்த ஜூன் மாதம் வரை தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 122 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ஒரு சில படங்கள் மட்டுமே பெரிதளவில் எதிர்பார்த்த பெரிய பட்ஜெட் படங்கள் ஆகும். பிற படங்கள் யாவும், வளரும் ஹீரோக்களை வைத்து சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால் சர்ப்ரைஸ் ஆக அந்த படங்கள் மட்டுமே ரசிகர்களை ஈர்த்துள்ளன. அப்படி ரசிகர்களை இந்த ஆண்டு ஈர்த்த ஆறு படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
1. மதகஜராஜா:
விஷால் நடிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவான திரைப்படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கியிருந்த இந்த படத்தில் வரலட்சுமி மற்றும் அஞ்சலி ஆகியோர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இப்போது ஹீரோவாக மட்டும் நடிக்கும் சந்தானம், சில ஆண்டுகளுக்கு முன்பு காமெடியனாக மட்டும் நடித்திருந்த படம் மதகஜராஜா. 12 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி இருந்த காமெடி என்றாலும் போதைய ரசிகர்களுக்கும் ஏற்றவாறு படம் இருந்ததால், இது கடந்த ஜனவரி வெளியான போது பெரும் வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவாக அமைந்தது.
2.குடும்பஸ்தன்:
குடும்ப ரசிகர்களுக்கு ஏற்ற ஹீரோவாக மாறி வருகிறார் மணிகண்டன். இவருக்கு குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படங்கள் கை கொடுத்தது போல, குடும்பஸ்தன் திரைப்படமும் பெரும் வரவேற்பு பெற்றவர். இந்த படத்தில் அவர் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த, கடன் வாங்கும் இளைஞராக நடித்திருந்தார். குடும்பஸ்தர்கள் என்னென்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பதை இந்த படத்தில் காமெடியாக காட்டி இருந்தனர். இது அனைவருக்கும் பிடித்தது போல இருந்ததால், படமும் ஹிட்டானது.
3.டிராகன்:
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த டிராகன் படம், இந்த ஆண்டின் முதல் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இளைஞர்கள் கொண்டாடிய இந்த படம் பல பெரியவர்களுக்கும் பிடித்திருந்தது. இதில் இடம் பெற்றிருந்த டைமிங் காமெடி, பாடல்கள் என அனைத்தும் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. இந்த படத்தையடுத்து பிரதீப் ரங்கநாதன் பிஸியான ஹீரோவாக வலம் வருகிறார்.
4.குட் பேட் அக்லி:
அஜித் குமாருக்கு 2025 ஆம் ஆண்டு ஏற்றம் கொடுத்த ஆண்டாக இருக்கிறது. அவரது விடாமுயற்சி படம் ரசிகர்களை ஏமாற்றினாலும், அதற்கடுத்து வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம் கதை எதுவும் இல்லை என்றாலும் அஜித் ரசிகர்களுக்கான ட்ரிட்டாக படம் இருந்ததால் தியேட்டர்களில் விசில் பறந்தது. வசூலிலும் இந்த படம் வெற்றி பெற்றது.
5.டூரிஸ்ட் ஃபேமிலி:
2025-ல், இதுவரை வெளியான மிகச்சிறந்த ஃபீல் குட் டிராமாவாக இருக்கிறது, டூரிஸ்ட் ஃபேமிலி. புதுமுக இயக்குநர் அபிஷான் இயக்கியிருந்த இந்த படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதில் ஷான் ரோல்டன் இசையில் இடம் பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தன. இலங்கையில் இருந்து தமிழ் நாட்டிற்குள் தஞ்சம் புகும் தமிழர்களை வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம், சினிமா நடிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றதோடு, இந்த ஆண்டிலேயே வெளிவந்த நல்ல தமிழ் படம் இது ஒன்றுதான் என்றும் கூறப்பட்டது.
6.மாமன்:
சூரி ஹீரோவாக நடித்திருந்த படம், மாமன். இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். இதில் ஐஸ்வர்யா லக்ஷ்மி சூரிக்கு ஜோடியாக நடிக்க, ஸ்வாசிகா சூரிக்கு சகோதரியாக நடித்திருந்தார். குடும்ப உறவிற்குள் வரும் பிரச்சனைகளை பேசும் படமாக இருந்த மாமன், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. விமர்சனத்திலும் வசூலிலும் வெற்றியை பெற்றது.e
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ