)
Housemates Movie Review Tamil : டி ராஜவேல் இயக்கத்தில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஹவுஸ் மேட்ஸ். Sivakarthikeyan Productions, Play smith studios & South Studios சார்பில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய பிரகாஷ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஹவுஸ் மேட்ஸ் படத்தில் தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ, வினோதினி, தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு M.S. சதீஷ், இசை ராஜேஷ் முருகேசன், எடிட்டர் A.நிஷார் ஷரேஃப்.
படத்தின் கதை:
தர்ஷன் மற்றும் அர்ஷா சாந்தினி இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். சொந்த வீடு இருந்தால் தான் தன் பெண்ணை கட்டிக் கொடுப்பேன் என்று அர்ஷாவின் தந்தை சொல்ல கடன் வாங்கி வேளச்சேரியில் புதிதாக வீடு வாங்குகிறார் தர்ஷன். திருமணம் ஆகி இருவரும் மகிழ்ச்சியாக அந்த வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் சிறிது நாட்களில் அந்த வீட்டில் அமானுஷ்யமாக சில விஷயங்கள் நடக்கிறது. பிறகு அந்த வீட்டில் பேய் இருக்கிறது என்று பயந்து வீட்டை விட்டு வெளியேற முயற்சிகின்றனர். இறுதியில் அவர்களுக்கு என்ன ஆனது? வீட்டில் இருந்தது பேய் தானா அல்லது வேறு எதுவுமா என்பதை பற்றி காமெடி கலந்த ஹாரர் வடிவில் சொல்லி இருக்கும் படம் தான் ஹவுஸ் மேட்ஸ்.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு
தர்ஷனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படமாக ஹவுஸ் மேட்ஸ் படம் அமைந்துள்ளது. அவருக்கென அளவெடுத்து செய்தது போல் இருந்தது இந்த கதாபாத்திரம். அதனை சிறப்பாகவே கையாண்டு இருந்தார் தர்ஷன். நடிகை அர்ஷா விற்கு படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பாகவே நடித்துள்ளார். முதல் பாதியில் பேயை பார்த்து பயந்து தனது கணவரிடம் அழுகும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். தர்ஷனின் நண்பராக வரும் விஜய் டிவி தீனா நன்றாக நடித்துள்ளார். பல இடங்களில் அவரது ஒன்லைன் காமெடி நன்றாக ஒர்க் ஆகி உள்ளது.
ஹீரோவிற்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில் காளி வெங்கட் மீண்டும் ஒருமுறை அசத்தியுள்ளார். அவரது மனைவியாக வினோதினியும் போட்டி போட்டு நடித்துள்ளார். இவர்களது குடும்பத்திற்கும் தர்ஷன் குடும்பத்திற்கும் இடையே நடக்கும் ஒவ்வொரு சண்டைகளும் பேச்சுவார்த்தைகளும் சுவாரசியமாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர் படங்களில் இந்த ஒரு கான்செப்டில் வெளியாகும் முதல் படம் இதுவே.0, இயக்குனர் ராஜுவேல் வித்தியாசமான ஒரு கதையை சிறப்பாக கையாண்டு உள்ளார்.
ஒளிப்பதிவு மற்றும் பாடல்கள் படத்திற்கு பக்க பலமாக உள்ளது. ஒரு வீட்டிற்குள் நடக்கும் கதை என்றாலும் அதை முடிந்தவரை சுவாரசியமாக கொடுக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். கிளைமாக்ஸ் இல் எமோஷனல் காட்சிகளும் நன்றாக ஒர்க் ஆகி இருந்தது. இதுவும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம். லாஜிக்காக இந்த படத்தை அணுகினால் சிலருக்கு ஒர்க் அவுட் ஆகாமல் போகலாம். இருப்பினும் ஒரு ஜாலியான குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக ஹவுஸ் மேட்ஸ் உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ