நடிகர் ஸ்ரீ குறித்து முதன்முறையாக அறிக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்! என்ன சொன்னார்?

How Is Actor Sri Now Lokesh Kanagaraj Statement : மாநகரம் பட நடிகர் ஸ்ரீ குறித்து பலவாரான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 18, 2025, 11:49 AM IST
  • நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை..
  • லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்..
  • அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
நடிகர் ஸ்ரீ குறித்து முதன்முறையாக அறிக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்! என்ன சொன்னார்?

How Is Actor Sri Now Lokesh Kanagaraj Statement : நடிகர் ஸ்ரீ குறித்த தகவல்கள், இணையத்தில் பலவாறாக வைரலாகி வந்தது. இந்த நிலையில், தனது நிலை குறித்து அவரே ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அவரது குடும்பமும் அவரது நிலை குறித்து லோகேஷ் கனகராஜ் மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

மோசமான நிலையில் நடிகர் ஸ்ரீ!

‘வழக்கு எண் 18/9 திரைப்படம்’ மூலம் ஹீரோவாக பிரபலமானவர், நடிகர் ஸ்ரீ. இந்த படத்தில் ஆரம்பித்து, தான் நடித்த அனைத்து படங்களிலும் அழுத்தமான கதாப்பத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்திருப்பார். இவரது முழு பெயர், ஸ்ரீராம் நடராஜன். இவர், ரசிகர்களின் கவனம் ஈர்த்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு உள்ளிட் படங்களில் நடித்திருக்கிறார்.

லோகேஷின் முதல் ஹீரோ..

தற்போது, ஸ்டார் இயக்குநராக விளங்கும் லோகேஷ் கனகராஜ், முதன் முதலில் இயக்கிய படம், மாநகரம். இந்த படத்தில் 2 ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தார், ஸ்ரீ. அதன் பிறகு, இவரை ஆளையே காணவில்லை. இதையடுத்து, இவர் எங்கே என அனைவரும் தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அவர் தலைக்கு கலர் அடித்துக்கொண்டு, அரை நிர்வாணமாக வீடியோக்கள் போட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்ததது. இதையடுத்து, அவருக்கு என்ன ஆனது என்று அனைவரும் தேடி வந்தனர்.

ஸ்ரீயின் தற்போதைய நிலை என்ன?

நடிகர் ஸ்ரீயின் நிலையில் பார்த் ரசிகர்கள் சிலர், அவர் எங்கே இருக்கிறார் எப்படி இருக்கிறார் என தொடர்ந்து அவரது போஸ்டகளில் கமெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ்ஜை பலரும் டேக் செய்து ஸ்ரீ-யை பார்த்துக்கொள்ளுமாறு கூறி வந்தனர்.

இதையடுத்து, ஸ்ரீ தமிழ் நாட்டிலேயே இல்லை என்றும், வட இந்தியாவில் இருப்பதாகவும் அவரது நண்பர் ஒருவர் நேர்காணலில் தெரிவித்தார். இதற்கிடையில், ஸ்ரீ போதை பழக்கத்திற்கு அடிமையானதாகவும், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் வதந்திகள் பரவியது. இதையடுத்து, அவரே நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், தான் டொபேக்கோ பொருட்களை உபயோகித்து 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றும், தான் நன்றாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிக்கை..

நடிகர் லோகேஷ் கனகராஜ், ஸ்ரீ-யின் குடும்பத்தின் தரப்பில் இருந்து வெளியான பத்திரிக்கை ஆறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில், ஸ்ரீயின் தற்போதைய நிலை குறித்து கூறியிருக்கிறார்.

நடிகர் ஸ்ரீராம், தற்போது மருத்துவ உதவியை பெற்றிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுரைகளின் படி இப்போது சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவர் உடல் நிலை தேறி வரும் வரை அனைவரும் அவரது தனிப்பட்ட விஷயங்களுக்கு மரியாதை கொடுக்குமாறும், அவர் குறித்து அவதூராக பரவும் செய்திகள் மன வேதனையை தருவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். அது போன்ற செய்திகளை உடனடியாக நீக்க வேண்டுமென கோரிக்கையும் விடுத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | நடிகர் ஸ்ரீ-க்கு இப்படியொரு நோயா? இப்போது எங்கு இருக்கிறார்? நண்பர் சொன்ன தகவல்..

மேலும் படிக்க | ஆளே மாறிப்போன பிரபல நடிகர் ஸ்ரீ! இதுதான் காரணமா? அவரே போட்டிருக்கும் பதிவு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News