தமிழ் சினிமா திரையுலகில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அஸ்வத் மாரிமுத்து. அசோக் செல்வன், ரிதிகா சிங், வானிபோஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் மக்கள் மத்தியில் அபார வரவேற்பை பெற்ற நிலையில், 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலையும் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தில் ப்ரதீப் ரங்கநாதனுடன் அனுபமா பரமேஸ்வரன், காயது லோஹர், ஜார்ஜ் மரியன், பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அஸ்வத் மாரிமுத்து சிம்புவின் 51வது படத்தை இயக்க இருக்கிறார்.
மேலும் படிங்க: திக் திக் போட்டி... டெல்லி மாஸ் வெற்றி - ஆட்டத்தையே மாற்றிய அஷுடோஷ் சர்மா...
இந்த நிலையில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி, இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஆகியோர் இன்று நடிகரும் தவெக தலைவருமான விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
இது குறித்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பொதுவாக நான் அதிகமாக பேசுவேன். ஆனால் இம்முறை என்னால் பேசவே முடியவில்லை. எனது படக்குழு நான் எப்போது பேசுவேன் என காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் என்னால் தளபதி விஜய்யை பார்த்ததும் பேசவே முடியவில்லை. தளபதி விஜய் என்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
கண்ணீர் மட்டுமே வந்தது. அனைவருக்கும் ஆச்சரியம். ஏன் அவர் மீது இவ்வளவு அன்பு என்று. என் நண்பர் பிரதீப் ரங்கநாதனை வைத்து வைத்து படமெடுக்க வந்தேன். ஆனால், அவர் அருமையாக திரைக்கதையை எழுதி இருக்கிறீர்கள் சகோதரரே என்று சொன்னார். என் வாழ்க்கை முழுமை அடைந்ததாக உணர்ந்தேன். இது போது எனக்கு என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிங்க: கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ