)
Idli Kadai Movie Pre Bookings Open : தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கப்பட்டுள்ளது.
ப்ரீ-புக்கிங் தொடக்கம்!
இட்லி கடை படத்தின் டிக்கெட் புக்கிங், இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து நடிகர் தனுஷ் படத்தின் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். இதில் சிவனேசன் இட்லி கடை என்று அந்த கடைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய போஸ்டர், தற்போது வைரலாகி வருகிறது.
Idli kadai bookings open now pic.twitter.com/7rgAiKjgDd
— Dhanush (@dhanushkraja) September 27, 2025
சாமி தரிசனம்!
இட்லி கடை படத்தின் ரிலீஸை ஒட்டி நடிகர் தனுஷ் தனது தாய் தந்தையர் கஸ்தூரிராஜா மற்றும் மகன்கள் லிங்கா, யாத்ரா, மற்றும் உறவினர்களுடன் போடிநாயக்கனூர் அருகே உள்ள சங்கராபுரம் கருப்பசாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். தனது படம் வெற்றி அடைய வேண்டும் என்று நீண்ட நேரம் கண்ணை மூடி பிரார்த்தனை செய்து சாமி வழிபாடு செய்துவிட்டு அதன் பின்னர் கோவில் கருப்பசாமி சிலை முன்பு நின்றிருந்த தனது தாய் தந்தையர் கஸ்தூரிராஜா தம்பதியினர் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்து உடனடியாக தனது மகன்களுடன் புறப்பட்டுச் சென்றார். காலையில் இருந்து கேரவன் வேன் காத்திருந்த நிலையில் பத்து நிமிடம் மட்டுமே சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ