)
மணிரத்னம் இயக்கத்தில் கமல், த்ரிஷா, அபிராமி, சிம்பு, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் தக் லைஃப். இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகிறது. தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்திற்கான பிரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், படம் வெளியாவதிலேயே சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது "தமிழில் இருந்துதான் கன்னட மொழி வந்தது" என கமல்ஹாசன் கூறி இருந்தார். இது கன்னட மொழியையும் கன்னட மொழி பேசும் மக்களையும் இழிவு படுத்தும் பேச்சு என கூறி கர்நாடகாவில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்ட களத்தில் குதித்தனர்.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி இல்லை என்றால், படத்தை வெளியிட மாட்டோம் என கன்னட திரைப்பட வர்த்தக சபையும் கூறியது. இதற்கு தமிழகத்தை சேர்ந்த கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவேரிக்கு தண்ணீர் தர மறுத்தபோது இப்படி ஒரு முடிவை நாங்கள் எடுத்திருந்தால், என்ன நடந்திருக்கும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் கமல்ஹாசன் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை இன்று காலையில் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நாகப்பிரச்சனா, மன்னிப்பு கேட்டாலே இந்த பிரச்னை முடிந்துவிடும், கமல்ஹாசன் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். மொழி குறித்து பேசுவதற்கு கமல் என்ன மொழியியல் வல்லுநரா அல்லது வரலாற்று ஆய்வாளரா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இச்சூழலில் படத்தின் வெளியிட்டை தள்ளி வைப்பதாக கமல் தரப்பு கூறி இருக்கும் நிலையில், வழக்கின் மீதான விசாரணை ஜூன் 10 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கமல்ஹாசனுக்கு தமிழகத்தில் ஆதரவு குரல்கள் எழும்பி உள்ளன. அதாவது தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகன் படத்தை கர்நாடகவை சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் ஜனநாடகன் படத்தைன் அந்த நிறுவனம் பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடவில்லை என்றால், கர்நாடகாவை சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என சமூக வலைத்தளங்களில் பலரும் கமலுக்கு ஆதவரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ