Ilayaraja Press Meet: இசைஞானி என அழைக்கப்படுபவர் இளையராஜா. இன்றைய தலைமுறை கூட அவரது பாடல்களை கேட்கின்றனர். அப்படி காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்துள்ளார் அவர். இன்றும் கூட இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இசை அமைப்பது மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, எழுதுவது என பன்முக திறமைகளை கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது அவர் புதிதான சிம்பொனி என்ற ஒன்றை இயற்றியுள்ளார். வரும் சனிக்கிழமை மார்ச் 08 ஆம் தேதி லண்டனில் முதல் முறையாக மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இளையராஜாவின் இந்த முயற்சிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், த.மா.க., தலைவர் ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் படிங்க: 2025-ல் இதுவரை ஹிட் ஆன 3 படங்கள்! என்னென்ன தெரியுமா? முழு லிஸ்ட் இதோ..
இன்க்ரிடபுள் இந்தியா மாதிரி நான் இன்க்ரிடபுள் இளையராஜா
இந்த நிலையில், இன்று லண்டன் செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார் இளையராஜா. அப்போது பேசிய அவர், சிம்பொனி இசை நிகழ்ச்சி உலகிலேயே தலைசிறந்த இசை நிகழ்ச்சியாக நடைபெற உள்ளது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும். இது எனது பெருமை அல்ல. நாட்டின் பெருமை, இன்க்ரிடபுள் இந்தியா மாதிரி, நான் இன்க்ரிடபுள் இளையராஜா.
உங்களுக்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்போது எனக்கு எந்த அளவிற்கு இருக்கும். நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் லண்டனில் சேர்க்க போகிறேன். இதுக்கு மேல யாரும் வந்ததும் இல்லை. வரப்போறதும் இல்லை என்றார்.
கோபமடைந்த இளையராஜா
முன்னதாக பேட்டியின் போது, இளையராஜாவிடம் செய்தியாளர் ஒருவர், தேவா தன் இசையை இன்றைய இளைஞர்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கேள்வி கேட்டார். அதற்கு நான் எதற்காக வந்திருக்கிறேன்? இது போன்ற அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்கலாமா? என கேபத்துடன் பதில் அளித்தார்.
மேலும் படிங்க: குடும்பஸ்தன் முதல் தண்டேல் வரை.. இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









