Ilayaraja Notice For Good Bad Ugly Movie: நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது 3 பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால், பட தயாரிப்பாளர்களிடம் இசையமைப்பாளர் இளையராஜா ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கோரியுள்ளார். இதுதொடர்பாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Ilayaraja Notice: அந்த 3 பாடல்கள்
'ஒத்த ரூபாயும் தாரேன்...', 'என் ஜோடி மஞ்சக் குருவி...', 'இளமை இதோ, இதோ...' பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 3 பாடல்களையும் குட் பேட் அக்லி படத்தில் இருந்து நீக்க 7 நாள்கள் அவகாசம் அளிப்பதாக அவர் அளித்த வக்கீல் நோட்டீஸில் தெரிவித்துள்ளார். 7 நாள்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பையும் கேட்க வேண்டும் என இளையராஜா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Ilayaraja Notice: பின்னணியில் பழைய பாடல்கள்
குட் பேட் அக்லி திரைப்படத்தில் பழைய அஜித் திரைப்படங்களின் பாடல்கள், காட்சிகள், வசனங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவையும் அதிகம் பயன்படுத்தப்பட்டிருந்தன. அஜித் ரவுடிகள் கூட்டத்துடன் சண்டையிடும் காட்சியின் பின்னணியில் இளமை இதோ, இதோ... பாடலும், வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் அறிமுக காட்சி உள்பட பல இடங்களில் ஒத்த ரூபாயும் தாரேன் பாடலும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
Ilayaraja Notice: மஞ்சும்மல் பாய்ஸ் விவகாரம்
கடந்தாண்டு வெளியாகி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்ட 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற மலையாள திரைப்படத்திலும் இளையராஜா இசையமைத்த 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே...' பாடல் பயன்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது.
மஞ்சும்மல் பாயஸ் திரைப்படத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதும், அதன் தயாரிப்பாளர்கள் இளையராஜாவை தனிப்பட்ட விதத்தில் சந்தித்தாக கூறப்படுகிறது. படத்தின் வெற்றியை கருத்தில்கொண்டு சுமார் ரூ.2 கோடி இழப்பீடு இளையராஜா தரப்பு கேட்டதாகவும், இறுதியில் ரூ.60 லட்சத்திற்கு செட்டில்மண்ட் செய்யப்பட்டு ஒப்புதலானதாகவும் கூறப்படுகிறது.
Good Bad Ugly: ரூ.200 கோடியை நோக்கி குட் பேட் அக்லி
தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி தென் மாநிலங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், பட தயாரிப்பாளர்கள் இளையாராஜாவை சந்தித்து ஒரு உடன்பாடுக்கு வருவார்களா, அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப். 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்தியாவில் மட்டும் முதல் நாள் வசூல் ரூ.29.25 கோடி என தகவல்கள் தெரிவித்தன. இந்தியா முழுவதும் தற்போதைய வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், உலகம் முழுவதும் ரூ.170 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க | OTT-யில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படங்கள்.. எந்த தமிழ் படம் முதல் இடத்தில் இருக்கு?
மேலும் படிக்க | குட் பேட் அக்லி.. 4 நாட்கள் வசூல் நிலவரம் என்ன.. இதோ முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









