இளையராஜா தற்போதும் ஓர் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் லண்டன் சென்று வேலியண்ட் என்கிற பெயரில் சிம்பொனியை அரங்கேற்றினார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து முதன்முறையாக சிம்பொனியை அரங்கேற்றிய பெருமையை இளையராஜா பெற்றார். இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
நான் இசையமைக்கும்போது ஒவ்வொரு ஸ்வரத்தின் இனிமையையும் ரசிக்கிறேன். இதன் காரணமாகதான் எனது பாடல்களை மக்கள் ரசிக்கிறார்கள். படத்தின் இயக்குநரை மட்டும் திருப்தியடைய செய்ய வேண்டும் என்றால், அது இரு வட்டத்திற்குள் அடங்கிவிடும். எனவே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இசையமைத்தால் ரசனைதான் முக்கியமாக இருக்கும். அதனால்தான் எனது பாடல்களை மக்கள் ரசிக்கிறார்கள்.
மேலும் படிங்க: ஜெய்லர் 2 எப்படி இருக்கும்.. யோகிபாபு சொல்லும் அந்த விஷயம்!
நான் ஒரு படத்திற்கு பின்னணி இசையமைக்க மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வேன். வெறும் இரண்டு நாட்களில் 6 பாடல்களுக்கு ட்யூன்கள் கொடுத்திருக்கிறேன். புதிதாக யார் வந்தாலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நினைப்பேன். அப்படிதான் எனக்கு அறிமுகமில்லாத பாலு மகேந்திரா, மணிரத்னம் போன்றவர்களின் படங்களுக்கு இசையமைத்தேன். ஓவ்வொரு படத்தில் இருந்து ஒவ்வொன்றை கற்றுக்கொள்வேன். அதேபோல் ஒவ்வொரு படமும் ஒரு பிரச்சனை கொடுக்கும் அதில் இருந்து நிறைய பாடம் பெறுவேன் எனக் கூறினார்.
இசைஞானி என போற்றப்படும் இளையராஜா, அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். 1976ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில், சுமார் 50 வருடங்களாக முன்னணி இசையமைப்பாளராக பயணித்து வருகிறார். அவரது பாடலை விரும்பாதே ஆளே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவரது தாக்கம் அனைத்து மக்களிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிங்க: கரூரில் திரண்ட சீயான் விக்ரம் ரசிகர்கள்: வீர தீர சூரன் 2 படக் கொண்டாட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









