)
India vs Australia 2nd ODI Rain Update: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஓடிஐ போட்டி நாளை (அக். 23) அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்து 0-1 என்ற கணக்கில் பின்னடைவில் உள்ள இந்திய அணிக்கு இது வாழ்வா, சாவா போட்டியாக பார்க்கப்படுகிறது.
அடிலெய்ட் ஓவல் மைதானம் இந்திய அணிக்கு ஓடிஐ போட்டிகளை பொருத்தவரை சிறப்பானதாக இருந்துள்ளது. 15 ஓடிஐ போட்டிகளில் 9 வெற்றிகளை அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணி படைத்துள்ளது. விராட் கோலிக்கும் இது மிகவும் ராசியான மைதானமாக இருக்கிறது. இங்கு 4 இன்னிங்ஸில் 2 சதம் உள்பட 244 ரன்களை விராட் கோலி அடித்திருக்கிறார்.
இதனால், நாளைய போட்டியில் விராட் கோலியின் மீதும், இந்திய அணியின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. புதிய கேப்டன் சுப்மான் கில்லின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. பிளேயிங் லெவனில் என்ன மாற்றத்தை கில் - கம்பீர் ஜோடி கொண்டுவரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவின் இடமும் தற்போது நெருக்கடியில் இருக்கிறது. ஜெய்ஸ்வால் ஓப்பனிங்கில் வர இருக்கிறார் என்ற பேச்சும் தற்போது எழுந்துள்ளது.
Ind vs Aus 2nd ODI: கடுப்பேற்றிய மழை
இப்படி ரசிகர்களுக்கும் நாளைய போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில், கடந்த முதல் போட்டியை போல் அடிலெய்ட் நகரிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறதா என்பதுதான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. கடந்த போட்டியில் முதல் பேட்டிங்கின் போது சுமார் 4 முறை மழை குறுக்கிட்டு, ஒரு இன்னிங்ஸில் 26 ஓவர்கள் மட்டும் வீசப்பட்டன. டாஸையும் தோற்றதால் இந்திய அணிக்கு மழை பாதகமாக அமைந்துவிட்டது. முதல் போட்டியின் தோல்விக்கு மழையும் ஒரு காரணம் எனலாம்.
ஆனால், இந்த முறை அடிலெய்டில் போட்டி நடைபெறும்போது எவ்வித இடையூறும் இருக்காது. மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை அறிக்கை கூறுகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும், மழைக்கான வாய்ப்பு 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தின் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமானவை. இங்கு பேட்டர்களால் அதிக ரன்கள் குவிக்க முடியும். அதேபோல், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமான சூழல் இருக்கும். இந்தியா சுழற்பந்துவீச்சில் சிறப்பாக இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு இது பாதகமாக அமையலாம்.
இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மான் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா/குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஓவன், அலெக்ஸ் கேரி, ஆடம் ஸாம்பா, ஜாஷ் ஹசில்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ