)
Indhu Falls At Karna Feet: தமிழ் சின்னத்திரையில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் Zee தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
தினமும் பரபரப்பான திருப்பங்களால் ரசிகர்களை கவரும் இந்த சீரியலில், நேற்றைய எபிசோடில் கர்ணா நமசிவாயத்தை கடத்திய காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இன்று ஒளிபரப்பாகும் எபிசோடில், தோழியின் அப்பாவை காப்பாற்றும் நோக்கில் இந்து கர்ணாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது முக்கிய காட்சியாக அமைகிறது. அந்த தருணத்தை புல்லட் பாண்டி வீடியோவாக எடுத்து கிருபாகரனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுப்புகிறார்.
வீடியோவை பார்த்த கிருபாகரன், “கர்ணா என்னுடைய ஆளுனு நிரூபிச்சிட்ட… அந்த பொண்ணு உன் காலில் விழுந்தது, என்னுடைய காலில் விழுந்த மாதிரி” என்று பெருமையாகக் கூறுகிறார். இதைக் கேட்ட திவாகரன் ஆத்திரமடைந்துவிடுகிறான். அதே சமயம், “என்னுடைய கௌரவத்தை காப்பாற்றிட்ட” என்று நமசிவாயம் இந்துவுக்கு நன்றி தெரிவிக்கிறார். இதற்கிடையில், வீடியோவை பார்த்த தீனதயாளன் கோபத்தில் ஆழ்ந்து, கர்ணாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து கணக்காளரிடம் பெண் பார்க்கச் சொல்கிறார்.
மற்றொரு பக்கம், ஜெயந்தி குழந்தை பெறுவதற்காக திவாகரனை ஹாஸ்பிடலுக்கு அழைக்கிறார். ஆனால் திவாகரன் வர முடியாது எனக் கூறியதால், அவர்களுக்குள் புதிய மோதல் உருவாகிறது. இவ்வாறு பரபரப்பாக நகரும் சின்னஞ்சிறு கிளியே சீரியலில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய, ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று இரவு 7 மணிக்கு உங்களது Zee தமிழில் ஒளிபரப்பாகும் புதிய எபிசோடை காண தவறாதீர்கள்.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ