)
Indhu Clashes With Karna: தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த சீரியலின் இன்றைய எபிசோடின் சுவாரஸ்யமான தருணங்கள் இதோ.
சித்ராவின் தவிப்பு மற்றும் கர்ணாவின் சந்தேகம் : கடந்த வாரத்தின் முடிவில் சித்ரா, இந்துவுக்கு பணம் கொடுக்க முடிவு செய்திருந்தார். இன்று, அவர் பணத்துடன் கீழே வரும்போது, கிருபாகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களைத் தவிர்த்து, சித்ரா மீண்டும் மேலே செல்கிறார். சிறிது நேரம் கழித்து கீழே வரும்போது, கர்ணா மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்த சித்ரா, அவனிடம் மாட்டிக் கொள்ளாமல் வெளியே செல்லத் திட்டமிடுகிறாள்.
ஆனால், சித்ராவைப் பார்க்கும் கர்ணா, "என்ன இங்கேயும் அங்கேயும் அலையிற?" என்று சந்தேகத்துடன் கேட்கிறான். அவனிடம் சமாளித்து, "ஒன்றும் இல்லை" என்று சொல்லிவிட்டு சித்ரா மீண்டும் மேல்மாடிக்குச் செல்கிறார்.
கர்ணா மற்றும் இந்துவின் வாக்குவாதம் : கர்ணா வீட்டிலிருந்து வெளியே கிளம்பும் போது, தெருமுனையில் இந்து சித்ராவுக்காக காத்திருக்கிறார். முதலில் அவளைக் கவனிக்காமல் கடந்து செல்லும் கர்ணா, அவளுடைய முகம் எங்கேயோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்று நினைத்து திரும்பி வருகிறான். இந்துவைப் பார்த்து, "நீ இங்க என்ன பண்ணற? என்னை ஃபாலோ பண்றியா?" என்று வம்பிழுக்கிறான். அதற்கு இந்து, "ஆமா, நீதான் பெரிய ஹீரோ, உன்னை ஃபாலோ பண்றதுக்கு!" என்று பதிலடி கொடுக்கிறாள். இதனால் கோபமடைந்த கர்ணா, "இது என்னுடைய ஏரியா" என்று சொல்கிறான். அதற்கு மேல் அவனிடம் வாக்குவாதம் வேண்டாம் என்று நினைத்து, இந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறாள்.
சுகுணாவின் அண்ணன் வீட்டில் விசேஷம் : சுகுணாவின் அண்ணன் பேரனுக்குக் காதுகுத்து விழா நடக்கவிருக்கிறது. இதற்காக கிருபாகரன் குடும்பத்தினர் அனைவரும் தயாராகிறார்கள். விழாவுக்கு அணிந்து செல்ல வேண்டிய நகைகளை எல்லாம் எடுத்து, யார் யாருக்கு என்னென்ன நகை கொடுக்கப்படுகிறது என்று கணக்கு எழுதுகின்றனர். "ஏதாவது ஒரு நகை காணாமல் போனால் அவ்வளவுதான்" என்று வீட்டுப் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார் கிருபாகரன்.
தீபாவின் போலி சான்றிதழ் திட்டம் : அதே சமயம், தீபா ஒருவருக்கு போன் செய்து போலி சான்றிதழ் குறித்து விசாரிக்கிறாள். மீதிப் பணத்தைக் கொடுத்தால், விரைவில் சான்றிதழ் தயாராகிவிடும் என்று அவர் கூறுகிறார். தீபா, அந்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போய் காதலனை திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறாள்.
காதுகுத்து விழா :கிருபாகரன் குடும்பத்தினர் காதுகுத்து நிகழ்ச்சிக்குச் செல்ல, அவர்களுக்கு அங்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது. கிருபாகரன் வீட்டுப் பெண்களைப் பார்த்து, "அண்ணன் உங்களை எல்லாம் தங்கத்தால் அலங்கரித்து வைத்திருக்கிறார் " என்று சுகுணாவின் அண்ணன் வியக்கிறார். அதே நேரம், சித்ரா யாருக்கும் தெரியாமல் சுகுணாவின் போன் மூலமாக இந்துவுக்கு போன் செய்து, கோவிலுக்கு வருமாறு அழைக்கிறாள்.
கிருபாகரன், சுகுணாவின் அண்ணனிடம் அவருடைய பேரன் என்ன படிக்கிறான் என்று விசாரிக்கிறார். அப்போது, "பேரன் அவ்வளவாகப் படிக்கவில்லை, ஆனால் என்னுடைய பேத்தி கலெக்டருக்குப் படிக்கிறாள்" என்று அவர் கூறுகிறார். இதைக்கேட்ட கிருபாகரன், "பெண்கள் பத்தாவது படித்தாலே போதும், அதற்கு மேல் அவர்களைப் படிக்க வைக்க வேண்டிய அவசியமில்லை" என்று தனது பழமைவாதக் கொள்கைகளை சொல்கிறான்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, 'சின்னஞ்சிறு கிளியே' தொடரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து காணத் தவறாதீர்கள்.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ