)
Indhu Search For Her Missing Father: தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் உங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சித்ரா இந்துவிடம் உதவி கேட்டிருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது இந்துவுக்கு பைக் டாக்ஸி பிசினஸ் செய்யலாம் என்று தோன்றிய நிலையில் பாஸ்கரின் அம்மா பூஜை செய்து பைக் டேக்ஸி பிசினஸை திறந்து வைக்க இந்து எல்லோரையும் ஆளுக்கு ஒரு பக்கமாக அனுப்பி அவர்களுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து பிசினஸை நல்லபடியாக நடத்துகிறாள்.
இதையடுத்து இரவு லேட் ஆக வீட்டுக்கு வர இந்துவின் அப்பா பாலு வீட்டுக்கு வரவில்லை என்பது தெரிய வருகிறது. அடுத்த நாள் காலை வரை அவர் வீட்டுக்கு வராததால் இந்து அவரைத் தேடி அலைகிறாள். ஒரு கட்டத்தில் தெரிந்த ஒருவரின் ஆட்டோவில் ஏறி தேடுவது ரோட்டில் கூட்டமாக நிற்க என்னாச்சு என்று சாதிக்க ஒரு பெயிண்டர் ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டதாக சொன்னதும் இந்து பதறுகிறாள்.
இதையடுத்து இன்று ஓடிப்போய் பார்க்க அது பாலு இல்லை என்று தெரிய வருகிறது. பிறகு பாலு வீட்டுக்கு வந்துவிட இந்து நிம்மதி அடைகிறாள். அவரும் ஒருவேளைக்கு சென்று இருந்ததாக சொல்லி இந்துவிடம் பணத்தை கொடுக்கிறார்.
மறுபக்கம் கர்ணா தீன தயாளனை வீல் சாரில் உட்கார வைத்து அழைத்துச் செல்லும் போது என்ன ஏதாவது பொண்ணோட பிரச்சனையாமே.. பொண்ணு என்பதால் தான் இன்னும் வண்டியை தராமல் இருக்கியா என்று நக்கல் அடிக்கிறாள்.
அடுத்து கருணா அவ எப்படியும் வரமாட்டா வண்டியை எடைக்கு போட்டு விடலாம் என்று சொல்ல புல்லட் பாண்டி எனக்கு என்னவோ வருவாங்களே தோணுது என்று சொல்ல இந்து ஆட்டோவில் வந்து இறங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ