Virat Kohli Favourite Tamil Song : இந்தியாவில் பலராலும் விரும்பப்படும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுள் ஒருவராக இருப்பவர், விராட் கோலி. ஐபிஎல் தொடரில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த இவர், சமீபத்த்தில் தனது அணி குறித்த ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.
விராட் கோலி:
“ரன் மெஷின்” என்று பெயர் பெற்றவர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தனது விளையாட்டு திரனுக்காக மட்டுமன்றி, கிரவுண்டில் ஆக்ரோஷமாக உணர்ச்சிகளை வெளிகாட்டுவதற்காகவும், தனது குறும்புத்தனத்திற்காகவும் பெயர் பெற்றவர் இவர். 36 வயதாகும் விராட், இந்திய கேப்டனாக விளங்கி, ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றிக்கு வழிவகுத்தது, ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு பரிசுகளை வென்றது, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மிக வேகமாக 13,000 ரன்களை கடந்தது என்று இவரது பெயருக்கு பின்னால் பல பெருமைகளும் நீண்டுகொண்டே போகிறது.
பெண்கள் பலருக்கு க்ரஷ் மெட்டீரியலாக இருக்கும் விராட் கோலி, நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாமிகா-அகாய் க்யூட்டான இரு பிள்ளைகள் இருக்கின்றனர். விராட் கோலியை ஒரு கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி குடும்ப தலைவராக பார்ப்பதற்கும் பலருக்கு பிடிக்கும்.
பிடித்த பாடல்..
விராட் கோலி, தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். முன்னர் இந்த அணியின் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும் இருந்த இவர், தற்போது நட்சத்திர வீரராக மட்டும் இருக்கிறார். விராட், சமீபத்தில் ஐபிஎல் தொடர்பான ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவர் ப்ளே லிஸ்டில் இருக்கும் தற்போதைய பிடித்த பாடல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அதை தெரிந்து கொண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்..” என்று கூறிவிட்டு அந்த பாடலை ப்ளே செய்தார்.
சிம்பு படம்..
சிம்பு நடிப்பில் 2023ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம், ‘பத்து தல’. இதனை கிருஷ்ணா இயக்கியிருந்தார். கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்றிருந்த “நீ சிங்கம்தான்” பாடல்தான் தனது தற்போதைய ஃபேவரெட் என்று விராட் கோலி கூறியிருக்கிறார்.
இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இதை விராட் ஏதேனும் கிரிக்கெட் வீடியோ எடிட்டில் பார்த்திருக்கலாம் என்றும் அப்போது பிடித்து போய் அதனை ஸ்பாடிஃபையில் கேட்க ஆரம்பித்திருக்கலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
ட்ரெண்டிங்கில் உள்ளது..
சிம்பு ரிப்ளை:
Nee singam dhan @imVkohli https://t.co/qVwdmnLusi
— Silambarasan TR (@SilambarasanTR_) May 1, 2025
விராட் கோலி, தனக்கு “நீ சிங்கம்தான்” பாடல் பிடிக்கும் என்று சொன்னதற்கு பிறகு, இந்த பாடல் யூடியூப் தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலர், “விராட் கோலி சொன்னதற்கு பிறகு இங்கு வந்திருக்கிறேன்” என்று அந்த பாடலுக்கு கீழ் சென்று கமெண்ட் செய்து வருகின்றனர். விராட் இப்படி சொன்னதற்கு பிறகு, தமிழ் மக்கள் மட்டுமன்றி வட இந்தியர்களும் இந்த பாடலை கேட்டு வருகின்றனர். நல்ல இசை, மொழிகள் மற்றும் மாநிலங்களை தாண்டியும் பயணிக்கும் என்பதற்கு “நீ சிங்கம்தான்” பாடல் ஒரு பெரிய உதாரணம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | அடடே! இது நல்லா இருக்கே! கிரிக்கெட் வீரர்களின் பயோபிக்-கில் தமிழ் நடிகர்கள்!
மேலும் படிக்க | விராட் கோலி எனக்கு நண்பர் கிடையாது.. ஆர்சிபி வீரர் பேட்டியால் சர்ச்சை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









