கனா காணும் காலங்கள் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அனைவரது மத்தியிலும் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, மாநகரம் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார் ஸ்ரீ. ஆனால் சிறிது நாட்களிலேயே தனிப்பட்ட காரணங்களால் இந்த தொடரில் இருந்து வெளியேறினார். கடைசியாக இருகப்பற்று என்ற படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீ. இந்நிலையில் நீண்ட நாட்களாக இவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது இவரின் புகைப்படங்கள் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
மேலும் படிங்க: திடீரென வைரலான தொட்டு தொட்டு பேசும் சுல்தானா! இந்த பாடல் எந்த படம் தெரியுமா?

நீளமான முடி மற்றும் தாடியுடன் மிகவும் ஒல்லியாக முழுவதும் ஆளே அடையாளம் தெரியாத படி உள்ளார் நடிகர் ஸ்ரீ. முதலில் உண்மையில் இவர் ஸ்ரீதானா அல்லது வேறு யாருமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. பிறகு இது நடிகர் ஸ்ரீ தான் என்றும் அவருடைய சமீபத்திய புகைப்படம் தான் இது என்றும் உறுதி செய்யப்பட்டது. நீண்ட நாட்களாக மன உளைச்சலில் இருந்த நடிகர் ஸ்ரீ குடும்பத்தை விட்டு பிரிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக தனியாக வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் போதைக்கு அடிமையாகி இவ்வாறு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இவரின் இந்த நிலைமைக்கு காரணம் அவர் நடித்த படங்களில் இருந்து இன்னும் சம்பளம் வரவில்லை என்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
நடிகர் ஸ்ரீயின் இன்ஸ்டாகிராம் பதிவு
தான் கடைசியாக நடித்த சில படங்களில் இருந்து தனக்கு முறையாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று நடிகர் ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உங்களால் படத்தில் பணியாற்றவர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால் எதற்கு படம் தயாரிக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். அதேபோல இறுகப்பற்று படத்தில் நடித்ததற்கு இன்னும் எனக்கு TDS amount 30,000 கொடுக்கப்படவில்லை. என்றும் நீண்ட நாட்களாக இது தொடர்பாக போராடி வருகிறேன் என்றும் பதிவிட்டு இருந்தார். இது தான் ஸ்ரீயின் இந்த நிலைமைக்கு காரணம் என்று ரசிகர்கள் பலரும் அந்த தயாரிப்பு நிறுவனத்தை சமுக வலைத்தளத்தில் திட்டி வந்தனர்.
தயாரிப்பாளர் விளக்கம்
"ஸ்ரீ அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து நாங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளோம். அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், நாங்கள் உட்பட, நீண்ட காலமாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். இது குறித்து ஏராளமான ஊகங்கள் உருவாகி வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ஸ்ரீ அவர்களைத் தொடர்புகொண்டு அவரை மீண்டும் நல்ல ஆரோக்கியத்திற்குக் கொண்டுவருவதே முதல் முன்னுரிமையாக இருக்கும். அதை அடைய யாராவது எங்களுக்கு உதவ முடிந்தால் மிகவும் நன்றி கூறுவோம்!! உண்மைகள் தெரியாமல் கருத்துகள்/கதைகளை வெளியிடுபவர்களுக்கும், என்னை தாக்குவதற்கு அவரது பாதிப்பைப் பயன்படுத்திக் கொண்டு பேசுபவர்களுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது" என்று இருகப்பற்று படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
We ar genuinely concerned about the health and well being of Shri. His family and friends including us are trying to reach him for a long time. It is so unfortunate that there is so much speculation forming around it. But reaching Shri and bring him back to good health will be…
— SR Prabu (@prabhu_sr) April 14, 2025
மேலும் படிங்க: ஜிவி பிரகாஷ் - சீனு ராமசாமி கூட்டணியில் வெளியாகும் இடிமுழக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









