VJ Priyanka Quitting Vijay TV : தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளராக விளங்குபவர், பிரியங்கா. இவரை, மக்களுக்கு மிகவும் பிடிக்கும். இவரை அனைவருக்கும் தெரிந்த முகமாக மாற்றியது, விஜய் டிவி. இவர், இந்த தொலைக்காட்சியில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளியானது.
விஜே பிரியங்கா:
ஒரு நிகழ்ச்சி நன்றாக செல்ல வேண்டும் என்றால், அது மக்களை ஈர்க்கும் வகையில் என்டெர்டெயினிங் ஆக இருக்க வேண்டியது அவசியம். அப்படி, கலகலப்பான உணர்வுடன் பலரை கவரும் வகையில் பேசுபவர், விஜே பிரியங்கா. கெரியரை ஆரம்பித்த புதிதில் வெவ்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் குழந்தைகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், அதன் பிறகு விஜய் தொலைக்காட்சிக்குள் நுழைந்தார்.
விஜய் டிவியில் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அதிலும் இவரும் இவரது இணை தொகுப்பாளர் மாகபா ஆனந்தும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் பலரை கவரும் வகையில் இருக்கும். அது மட்டுமல்ல, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த இவர் கடைசியில் டைட்டில் வின்னராகவும் ஆனார்.
2வது திருமணம்..
பிரியங்காவிற்கு, 2016ஆம் ஆண்டில் தனது நெடுங்கால காதலரும் நண்பருமான பிரவீன் குமாரை திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணமாக இருப்பினும், சில ஆண்டுகளிலேயே பிரியங்கா அவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தனது விவாகரத்து குறித்தோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ எங்குமே வெளியில் பேசியதில்லை.
பிரியங்கா, சமீபத்தில் வசி என்பவரை திருமணம் செய்தார். இவர், இலங்கையை சேர்ந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவண்ட் மேனேஜ்மெண்ட் தொழில் செய்யும் வசி, டிஜே-வாகவும் இருக்கிறார். பல திருமண நிகழ்வுகளில் டிஜேவாக பணியாற்றி வருகிறார். இவரும் பிரியங்காவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த போது நட்பாக பழகியதாகவும், அதன் பிறகு இந்த உறவு காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் திருமண நிகழ்வானது, கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி நடந்தது.
விஜய் டிவியில் இருந்து விலகல்?
சில மாதங்களுக்கு முன்பு, விஜய் டிவி தற்போது கைமாறி விட்டதாகவும், இதனால் இதில் ஒளிபரப்பாகி வந்த சில நிகழ்ச்சிகள் தற்போது நிறுத்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, சில தொகுப்பாளர்கள் இந்த சேனலில் இருந்து விலகியதாகவும், அப்படி விலகியவர்களுள் பிரியங்காவும் ஒருவர் என்றும் கூறப்பட்டது.
உண்மை என்ன?
பிரியங்கா, எப்போதும் தன்னை பற்றி என்ன சர்ச்சை பரவினாலும் அது குறித்து பேச மாட்டார். அப்படித்தான், இது குறித்தும் எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால், திருமணம் முடித்த கையோடு அவர் அமீர்-பாவனி திருமணத்தில் கலந்து கொண்டதையும், அதன் பிறகு தேனிலவிற்காக லண்டன் சென்றதையும் பார்க்க முடிந்தது. இதையடுத்து, உண்மையில் பிரியங்கா இந்த சேனலில் இருந்து விலகி விட்டாரா? உண்மை என்ன என்பது குறித்து ஒரு பிரபலம் பேசியிருக்கிறார்.
பேசிய பிரபலம்..
ஒரு பிரபல ரேடியோ ஜாக்கி இது குறித்து பேசியிருக்கிறார். பிரியங்கா, தனது திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு இப்போது ஹனிமூனில் இருப்பதாகவும், இது முடிந்த பிறகு மீண்டும் விஜய் டிவிக்கு வந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்றும் கூறியிருக்கிறார்.
அதே போல, கோபிநாத்தும் விஜய் டிவியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்று அந்த பிரபலம் பேசியிருக்கிறார். இந்த தகவலை தான் அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கேட்ட பின்புதான் கூறுவதாகவும் சொல்லியிருக்கிறார்.
மேலும் படிக்க | வயதானவரை திருமணம் செய்தாரா பிரியங்கா? இருவருக்குமான வயது வித்தியாசம் தெரியுமா?
மேலும் படிக்க | பிரியங்காவை திருமணம் செய்தவர் இவ்ளோ பெரிய ஆளா? இவர் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









