ஜெயிலர் 2 தான் கடைசி? சினிமாவில் இருந்து ஓய்வு பெரும் ரஜினிகாந்த்?

சினிமாவில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக ஒரு வதந்தி வெளியாகி அதிகம் பரவத் தொடங்கியது.

Written by - RK Spark | Last Updated : May 6, 2025, 10:20 AM IST
  • ஓய்வை அறிவிக்கும் ரஜினி?
  • ஜெயிலர் 2க்கு பிறகு ஓய்வா?
  • மனைவி லதா சொன்ன தகவல்.
ஜெயிலர் 2 தான் கடைசி? சினிமாவில் இருந்து ஓய்வு பெரும் ரஜினிகாந்த்?

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய அளவில் இன்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் ரஜினிகாந்த். 74 வயதிலும் இளைஞர்களுக்கு போட்டி போடும் அளவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். படங்களில் நடிப்பது,  பொது நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது என தொடர்ந்து தன்னுடைய பிரசன்ஸை காட்டி வருகிறார். ரஜினி நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் சரியான வெற்றியை பெறவில்லை என்றாலும் ஜெயிலர் படம் வெளியாகி அவரது மார்க்கெட்டை மீண்டும் உயர்த்தியது. ஜெயிலர் கிட்டத்தட்ட உலக அளவில் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து வெளியான வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்! பைசன் ரிலீஸ் தேதி இதுதான்!

கூலி படம்

தற்போது ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் அளித்த பேட்டியில் கூலி படத்தை முழுவதும் பார்த்துவிட்டதாகவும் படம் சூப்பராக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் 2

கூலி படம் முடிந்த உடனே ஜெயிலர் 2 படத்தில் இணைந்துள்ளார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படம் தொடர்பாக வெளியான ப்ரோமோ வீடியோ தாறுமாறு வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் சிலர் இந்த படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜெயிலர் 2 படத்தை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

சினிமாவில் இருந்து ஓய்வு?

இப்படி பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக ஒரு வதந்தி வெளியாகி அதிகம் பரவத் தொடங்கியது. 74 வயது ஆகி உள்ளதால் தனக்கு ஓய்வு தேவை என்று ரஜினி முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இதற்கு ரஜினிகாந்தின் மனைவி லதா மறுப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் ஓய்வை பற்றி இன்னும் யோசிக்கவே இல்லை. இன்னும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | யோகி பாபு நடிகராக இருக்கவே தகுதியற்றவர் - பிரபல தயாரிப்பாளர் குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News