இசைஞானி இளையராஜா தனியார் ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இசைஞானி என போற்றப்படும் இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவரது இசையை விரும்பாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது இசையால அனைவரையும் ஈர்த்தவர். இச்சூழலில் சமீபத்தில் இவர் லண்டன் சென்று வேலியண்ட் என்கிற பெயரில் சிம்பொனியை அரங்கேற்றினார். இதன் மூலம் இந்தியாவில் இருந்து முதன்முறையாக சிம்பொனியை அரங்கேற்றிய பெருமையை இளையராஜா பெற்றார். இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, நான் திரைதுறையில் 50 வருடங்களாக பயணிக்கிறேன். நான் இசையமைக்கும் பாடல் முதலில் எனக்கு பிடித்தால் தான் மற்றவர்களுக்கு அது பிடிக்கும். அப்படி ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வேன். அதனால் தான், என்னுடைய இசை அனைவருக்கும் பிடிக்கிறது. நான் இசையமைத்த பல பாடல்கள் எனக்கு பல பாடங்களை கற்றுத்தந்திருக்கிறது. இயக்குநர் கேட்கிறார் என்பதற்காக நான் இசையமைத்துக்கொடுத்தால் அது ரசிகர்களிடம் கண்டிப்பாக எடுபடாது. அது தான் உண்மை.
ஒரு பாடலுக்கு எதிர்பார்ப்பு இல்லை என்றால் அங்கு ரசனைதான் முக்கியமானதாக இருக்கும். எல்லையே இல்லாத கற்பனைதான் பாடலுக்கு மிகவும் முக்கியம். பாடலுக்கு எது தேவையோ அதை மட்டுமே கொடுக்க வேண்டும். பல பாடல்களுக்கு நான் முதல் வரி எழுதி இருக்கிறேன். இசையமைக்கும் போது வரிகள் தானாகவே வந்துவிடும். நான் வெண்பா எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் இலக்கனம்படி எழுதினால் நினைப்பதை வெளிக்கொண்டுவர முடியவில்லை. நினைத்ததை சொல்ல இலக்கம் தேவை இல்லை என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் வந்த பிறகுதான் பாடல்கள் பாமர மக்களுக்கான மொழிகளில் வந்த்து என கூறுவது தவறு. அதற்கு முன்னரும் அப்படிதான் இருந்தது. எனவே அப்படி சொல்லாதீர்கள். எந்த வேலையை செய்தாலும் அதனை முழுமையாக தெரிந்தால்தான் அந்த வேலை முழுமையடையும். இப்போது வரை எனக்கு இசை தெரியும் என நம்பவில்லை. இசை தெரிந்தவர்களுக்காக நான் ஏகப்பட்ட விஷயங்களை கற்றுக்கொண்டு தேடவேண்டும். இசை என்பது கணக்குப்போட்டு வருவதில்லை. இசையை கட்டுக்குள் வைத்து வெளியிட்டால் அது யாருக்குள்ளும் கனெக்ட் ஆகாது. அழகோடும், இயல்போடும் இருந்தால்தான் அது மக்களை சென்றடையும் எனப் பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ