Actress Trisha List Movies 2025 : தமிழ் திரையுலகை, கடந்த 20 ஆண்டுகளாக தன் வசப்படுத்தியிருக்கும் நடிகை, த்ரிஷா. இவர், தனது முதல் படத்தில் மட்டும்தான் துணை நடிகையாக நடித்தார். அதன் பிறகு ஹீரோயினாக மட்டுமே திரையுலகில் தோன்றினார். 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இப்போது வரை நாயகியாக மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு கடந்த 10 ஆண்டுகளில் நடக்காத ஒரு விஷயம் தற்போது நடந்துள்ளது.
ஒரே வருடத்தில் 6 படங்கள் ரிலீஸ்:
நடிகை த்ரிஷா, 20-30 வயதில் இருந்த போது வரிசையாக பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். அப்போதெல்லாம் அசால்டாக இவர் நடித்த படங்கள் 6-7 வரை வெளியாகும். இப்போது, சுமார் 10 வருடங்களுக்கு பிறகு அவருக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்த வருடம் தொடங்கியது முதல், டிசம்பர் வரை த்ரிஷா ரொம்ப பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடைசியாக, 2015ஆம் ஆண்டில்தான் அவர் நடித்த சகலகலா வல்லவன், தூங்காவனம், லயன், என்னை அறிந்தால் உள்ளிட்ட 6 படங்கள் வெளியானது. இதையடுத்து, அதே போல 2025லும் அப்படி ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது. இதை கேள்விப்பட்ட பலர், இனி கோலிவுட்டே இங்க கைலதான் என கூறி வருகின்றனர். அந்த படங்களின் முழு லிஸ்ட் இதோ:
விடாமுயற்சி:
அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்த படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படம், கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் த்ரிஷா கயல் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்த படம் கடைசியில் தோல்வியில் முடிந்தது.
குட் பேட் அக்லி:
அஜித்துடன் உடனே அடுத்த படத்திலும் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா. குட் பேட் அக்லி படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படம், மக்களை கவர்ந்ததோடு, த்ரிஷாவின் ரம்யா கதாப்பாத்திரமும் பலரை ஈர்த்தது. இது, அஜித்துடன் அவர் ஜோடியாக நடிக்கும் 6வது படமாகும். இப்படம், ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி இருந்தது.
தக் லைஃப்:
மணி ரத்னம்-கமல்ஹாசன் 38 வருடங்களுக்கு பிறகு இணைந்து பணிபுரியும் படம், தக் லைஃப். இந்த படத்தில் இவர்கள் மட்டுமல்ல, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ ஜோடி சிம்பு-த்ரிஷாவும் சேர்ந்திருக்கின்றனர். இந்த படம், வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருப்பதை அடுத்து, இப்போது ப்ரமோஷன் தொடங்கியிருக்கிறது.
விஸ்வாம்பரா:
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்திருக்கும் படம், விஸ்வாம்பரா. இதில் த்ரிஷா, அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில், வரும் மே 9ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
சூர்யா 45:
சூர்யாவின் 45வது படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதனை, ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இதில், சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இந்த படமும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராம்:
மலையாள மொழி படங்களையும் விட்டு வைக்காத த்ரிஷா, கடந்த ஆண்டு ஒரு வெப் தொடரிலும் ஒரு படத்திலும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டும் ராம் என்ற படத்தில் நடிக்கிறார். மாேகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை விஷ்ணு ஷ்யாம் இயக்குகிறார். இந்த படமும், இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | உலக சாதனை படைத்த த்ரிஷாவின் படம்! 25 வருஷ பழசு..எந்த படம் தெரியுமா?
மேலும் படிக்க | 41 வயதில் கல்யாண பொண்ணாகும் த்ரிஷா? வைரலாகும் போட்டோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ