Jailer 2 Video Leaked Online : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம், ஜெயிலர் 2. இந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Jailer 2 Video Leaked Online : மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களுள் ஒன்றாக இருக்கிறது, ஜெயிலர் 2. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கிறார். மிக விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு தெரிந்து கொள்வோம்.
ஜெயிலர் 2:
70களை கடந்தும் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார், ரஜினிகாந்த். கடந்த ஆண்டு இவர் நடித்த கூலி திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற பிறகு, 2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுராஜ் உள்ளிட்ட பலர் கேமியோ கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இப்படத்தின் ஷூட்டிங் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் கசிந்த காட்சிகள்:
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, கோவா உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்தது. படத்தின் கடைசிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில், ஜெயிலர் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தங்களின் திருட்டு தடுப்பு குழு இந்த நிலையை கண்காணித்து வருவதாகவும், இந்த காணொலிகளை பகிர்வது மற்றும், விளம்பரப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ள கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த கண்டெண்ட்களை நீக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது பட தயாரிப்பு நிறுவனம். இந்த காணொலிகளை பகிர்வது மற்றும் வீடியோவை டவுன்லோடு செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.
ஜனநாயகன் மாதிரி ஆகிடுமோ?
விஜய், அரசியலில் முழு நேரமாக ஈடுபடுவதற்கு முன்பு நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத இயக்கியிருக்கிறார். பட வேலைகள் அனைத்தும் முடிந்து, இந்த வருடத்தின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்று வழங்கப்படாததன் காரணமாக, இந்த படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நீதிமன்ற வழக்கு, படத்தின் மறு ஆய்வு உள்ளிட்டவை முடிந்தாலும், படத்தில் ஹெவியான அரசியல் பேசப்பட்டுள்ளதால், இதனை தேர்தல் சமயத்தில் ரிலீஸ் செய்ய முடியாது என்பதால் அதன் புது ரிலீஸ் தேதியை இன்னும் வெளியிடாமல் படக்குழு காத்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில்தான், ஜனநாயகன் திரைப்படம் திடீரென இணையத்தில் லீக் ஆனது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பாக, ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய்யின் 5 நிமிட இன்ட்ரோ காட்சியானது முதலில் இணையத்தில் வெளியானது. இதற்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே 3 மணி நேர படமும் இணையத்தில் வெளியனது. இது, படக்குழுவிற்கு மட்டுமன்றி, விஜய் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை முதலில் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். அதன் பிறகு சமீபத்தில் படத்தின் உதவி படத்தொகுப்பாளராக இருந்த ஒப்பந்த ஊழியர்தான் இந்த படத்தை லீக் செய்தார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் உள்பட 3 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். இப்படி, ஜனநாயகன் படத்திற்கு வந்த நிலை, ரஜினியின் படத்திற்கும் வந்து விடுமோ என்கிற அச்சத்தில் ரஜினி ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஜெயிலர் 2 நடிகர்கள் யார்?
ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அதில் வில்லனாக வந்த விநாயகம், இரண்டாம் பாகத்திலும் ஒரு ரோலில் வருகிறார். அவரது கேரக்டர், முதல் பாகத்திலேயே உயிரிழந்து விட்டது என்பதால், இரண்டாம் பாகத்தில் அவருக்கான ஃப்ளேஷ்பேக் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகன் லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கேமியோ தோற்றத்தில் வருகின்றனர். இந்த படத்தில், இந்தி நடிகர் ஷாருக்கானை ரஜினியின் நண்பர் கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவர் பெரிய ஹீரோக்களின் படங்களில் கேமியோவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதால் அந்த கேரக்டரில் இப்போது தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
எப்போ ரிலீஸ்?
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, இப்போது வரை திட்டமிட்டப்படி நடந்து முடிந்து வருகிறது. படத்தின் அறிவிப்பு வெளியான போதே, திரைப்படம் இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. அதன்படி, ஜெயிலர் 2 திரைப்படம் வரும் ஜூன் மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஜெயிலர் படத்தின் முதல் பாகமும் 2023ஆம் ஆண்டின் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!